ரூ.100 கோடி வசூலை கடந்த எம்புரான் | இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஹிருத்திக் ரோஷன் | காதல் எப்போதுமே வெற்றி பெறும் : திரிஷா வெளியிட்ட பதிவு | ஜி.வி.பிரகாஷின் பிளாக்மெயில் படத்திற்கு இசையமைக்கும் சாம் சி.எஸ் | மனைவி சங்கீதாவுக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்திய ரெடின் கிங்ஸ்லி | சிக்கந்தர் பட பிரமோஷன் : கிளாமர் காஸ்ட்யூமில் காஜல் அகர்வால் | ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஓடிடி-யில் மாஸ் காட்டும் சூப்பர் ஹிட் படம் | சமுத்திரகனி கதை நாயகனாக நடிக்கும் 'பைலா' | பெப்சிக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு | உ.பி.முதல்வர் யோகியின் வாழ்க்கை சினிமா ஆகிறது |
காதல் பாதை படம் 10 மாநிலங்களில் வளர்ந்துள்ளது. ஒரு அழகான காதல், அந்த காதலின் பயணம், பயணத்தின்போது கூடவே துரத்தும் பயம் ஒரு பக்கம், பரிதவிக்கும் பாசம் ஒரு பக்கம் என காதல் பாதையில் உள்ள பலம் - பலவீனங்களை கதை சித்தரிக்கிறது. காதலின் சின்னமான தாஜ்மஹால், இந்த படத்தின் காதலர்களின் காதல் சின்னமாகவும் மாறும் கனமான கதை.
`பூ `களவாணி ஆகிய படங்களுக்கு இசையமைத்த எஸ்.எஸ்.குமரன், இந்த படத்துக்கு இசையமைத்து இருக்கிறார். கே.வெங்கடேஷ், சஜன்ராஜ், கே.ஜாங்கிட் ஆகிய மூவரும் கூட்டாக தயாரிக்க, வியாஸ் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்துள்ளார். வினோத்குமார்-வித்யா கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்க, தலைவாசல் விஜய், மன்சூர் அலிகான், தீக்குச்சி கணேசன், சுமன் ஷெட்டி, சத்யப்ரியா, நீலிமாராணி ஆகியோரும் நடித்துள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஒரிசா, குஜராத், டெல்லி, ஜார்கண்ட் ஆகிய 10 மாநிலங்களில் இந்த படம் வளர்ந்து இருக்கிறது.