நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
இன்றைக்குள்ள கல்வி முறையை கடுமையாக விமர்சித்து பல படங்கள் வந்து கொண்டிருக்கிறது. பசங்க 2, தொண்டன், அச்சமின்றி, உள்ளிட்ட பல படங்கள் வந்தது தற்போதும் பல படங்கள் தயாராகி வருகிறது, அவற்றில் ஒன்று பாடம், இயக்குனர் ராஜேஷின் உதவியாளர் ராஜசேகர் இயக்கி உள்ளார். ரோலன் மூவீஸ் சார்பில் ஜிபின் தயாரித்துள்ளர், கார்த்திக், மோனா என்ற புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்துள்ளர், மனோ ஒளிப்பதிவு செய்துள்ளர். படம் பற்றி ராஜசேகர் கூறியதாவது:
சமீபத்தில் கூட ஒரு உயிரை பறித்த ஒரு முக்கிய சமுதாய பிரச்னையை பற்றி தன் பாடம் பேசும். தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவர்கள் மீது ஆங்கில கல்வியையும், மொழியையும் திணித்தால் நடக்கும் சீர்கேடுகள் பற்றியே படம் இது. ஆங்கிலம் என்பது வெறும் ஒரு மொழியே தவிர வாழ்வு முறை கிடையாது என்பது நம்மில் பலருக்கு புரிவதில்லை. இதனை மையமாக வைத்து, ஒரு மாணவனுக்கும் அவனது ஆசிரியருக்கும் இடையே நடக்கும் போர் தான் பாடம் .
இந்த போரில் மாணவன் எப்படியெல்லாம் சவால்களை சந்தித்து வெற்றி பெற்றான் என்பதே இப்படத்தின் கதை. புத்துணர்வும் தன்னம்பிக்கையும் ஊட்டும் படமாக இது இருக்கும். நமது முறையற்ற கல்விமுறையையும், பெற்றோர்களின் மனநிலையையும், மாணவர்கள் மீது போடப்படும் சமுதாய அழுத்தங்களையும் இப்படம் அலசும். எல்லா மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் தங்களை பாடம் கதையுடன் இணைத்துக் கொண்டு ரசித்து மகிழ்வார்கள் என நம்புகிறேன் என்கிறார் ராஜசேகர்.