விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் |
21 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம் இந்தியன். ஷங்கர் இயக்கத்தில் கமல், மனீஷா கொய்ராலா, ஊர்மிளா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில், கஸ்தூரி நடித்திருந்தார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார், ஜீவா ஒளிப்பதிவு செய்திருந்தார். கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்திருந்த இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது, அதில் வரும் இந்தியன் தாத்தா கேரக்டர் இப்போதும் வாட்ஸ் ஆப், மீம்சில் டிரண்டிங்கில் உள்ளது.
தற்போது எந்திரன் 2 படத்தை இயக்கி வரும் ஷங்கர். அடுத்த இந்தியன் இரண்டாம் பாகத்தை இயக்கும் முடிவில் இருக்கிறார். தனது டீமின் உதவியுடன் இந்த காலத்தில் இந்தியன் தாத்தா என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்கிற மாதிரி திரைக்கதை அமைத்துள்ளார். தற்போது கமல்ஹாசன் எடுத்து வரும் அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப இரண்டாம் பாகத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். தற்போது இயக்குனர் என்ற முறையில் 2ஓ படத்தின் பணிகளை முடித்து விட்ட ஷங்கர் அடுத்து இந்தியன் 2வுக்காக கமலை அடிக்கடி சந்தித்து பேசி வருகிறார்.
இது குறித்து கமல் வட்டாரத்தில் விசாரித்தபோது... "இந்தியன் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதும், அதில் கமல் நடிக்க இருப்பதும் உண்மைதான். தற்போது இந்த திட்டம் பேச்சு வார்த்தை அளவிலேயே இருக்கிறது. தயாரிப்பாளர் யார் என்பது முடிவாக வில்லை" என்கிறார்கள்.