நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
ஸ்ரீ ஸ்ரீ கணேஷ் நிறுவனம் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரிக்கும் படம் உன்னால் என்னால். ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா இயக்கி ஒரு ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் ஜெகா, உமேஷ் ஆகியோரும் ஹீரோவாக நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக லுப்னா, நிகாரிகா, சஹானா என 3 ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். கிச்சாஸ் ஒளிப்பதிவு செய்கிறார், முகமது ரிஸ்வான் இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் ஜெயகிருஷ்ணா கூறியதாவது:
கிராமத்திலிருந்து பிழைப்பு தேடி சென்னைக்கு வரும் மூன்று இளைஞர்கள் பொருளாதார தேவைகளை நோக்கி பயணிக்கும்போது சந்தர்ப்ப சூழ்நிலையில் பணத்துக்காக எதையும் செய்யும் கும்பலிடம் சேர்கிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த கும்பலின் சுயரூபம் தெரிந்த பிறகும் அந்த இளைஞர்கள் பணத் தேவைக்காக பணிந்தார்களா? இல்லை சதிவலையை உடைத்து மனசாட்சிக்கும், மனித நேயத்திற்கும் மகுடம் சூடினார்களா என்பதுதான் படத்தின் திரைக்கதை. வேகமும் விவேகமும் கலந்த, சுவாரஸ்யங்களுடன், அடுத்தடுத்து யூகிக்க முடியாத திரைக்கதையாக இருக்கும் விதத்தில் உருவாக்கியுள்ளோம். இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. என்றார் இயக்குனர் ஜெயகிருஷ்ணா.