மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
ஏவிஎம் நிறுவனம் தயாரித்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பான தொடர் ஒரு மனிதனின் கதை. எழுத்தாளர் சிவசங்கரியின் கதை. எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். ரகுவரன் இந்த தொடரின் மூலம் புகழ்பெற்றுத்தான் பெரிய நடிகர் ஆனார். இது மதுவுக்கு அடிமையான ஒருவனின் கதை. மிகுந்த வரவேற்பை பெற்ற இந்தத் தொடரை சினிமாவாக தயாரிக்க ஏவிஎம் நிறுவனம் முடிவு செய்தது. காரணம் மது அரக்கன் அப்போதும் இளைஞர்களை சீரழித்துக் கொண்டிருந்தான்.
ஒரு மனிதனின் கதை தொடர் தியாகு என்ற பெயரில் சினிமாவானது. எஸ்.பி.முத்துராமன் சம்பளம் எதுவும் பெறாமல் இயக்கிக் கொடுத்தார். ரகுவரன் நடித்தார். விருதுக்கென எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு விருது எதுவும் கிடைக்கவில்லை. அன்று முதல்வராக இருந்த கருணாநிதி மதுவிலக்கு பிரச்சாரத்துக்கு ஒரு படம் எடுக்க முடிவு செய்திருந்தார். ஏவிஎம் எடுத்துள்ள தியாகு படம் பற்றி எழுத்தாளர் சிவசங்கரி மூலம் கேள்விப்பட்டு அதனை வாங்கி தியேட்டரில் திரையிட முடிவு செய்தார்.
மதுவின் கொடுமையை விளக்கும் இந்தப் படத்திற்கு பணம் தேவையில்லை மக்களுக்கு சென்று சேர்ந்தால் போதும் என்று பணம் வாங்காமலேயே அரசுக்கு படத்தை கொடுத்தது ஏவிஎம் நிறுவனம். அரசும் பல தியேட்டர்களில் படத்தை வெளியிட்டது. ஆனாலும் மக்கள் வந்து பார்க்கவில்லை. அது அப்படியே பெட்டிக்குள் போய்விட்டது. இன்றைக்கு மது அரக்கன் ஆட்டம் அதிகமாகிவிட்டதால் இப்போது அந்தப் படத்தை ஏவிஎம் நிறுவனமோ, அல்லது யாராவது வாங்கியோ சின்னத்திரையில் வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும். ஒரு சிலராவது திருந்த வாய்ப்பிருக்கிறது.