எனக்கு தடை விதிப்பவர்களிடம் ஏன் என்று கேளுங்கள்: ராஷ்மிகா | அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பூமி பட்னேகர் | பிளாஷ்பேக் : அமிதாப்பச்சன் பட ரீமேக்கில் ஆர்வம் காட்டிய ரஜினி | பழம்பெரும் பாடகி, நடிகை பாலசரஸ்வதி தேவி காலமானார் | நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் |
தெலுங்கில் விஜய் தேவரகெண்டா, ரீத்து வர்மா நடிப்பில் சிறிய பட்ஜெட்டில் உருவாகி, பெரிய வசூலை அள்ளிய படம் 'பெள்ளி சூப்புலு'. இந்த படத்தை தமிழில் இயக்கும் திட்டத்துடன் அதன் தமிழ் ரீ-மேக் உரிமையை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் வாங்கி வைத்திருந்தார்.
அவர் ஏற்கனவே இயக்கி வரும் படங்கள் இன்னும் முடிவடையாமல் இருப்பதால், தற்போது இந்த படத்தை இயக்கும் பொறுப்பை தன்னுடைய இணை இயக்குனரான செந்தில் வீரசாமியிடம் வழங்கியுள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன். இந்த படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வந்தது.
இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க விஷ்ணு விஷால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விஷ்ணு விஷாலின் மானேஜர்தான் தமன்னாவுக்கும் மானேஜர் என்பதால் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க தமன்னாவை கமிட் பண்ணி உள்ளனர்.
இந்த படத்திற்கு 'பெண் ஒன்று கண்டேன்' என்று டைட்டில் வைத்துள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன். 1974 ஆம் ஆண்டு கோபு இயக்கத்தில் முத்துராமன் நடிப்பில் வெளிவந்த தமிழ்ப்படத்தின் பெயர். சில வருடங்களுக்கு முன் பூபதி பாண்டியன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட ஒரு படத்துக்கு 'பெண் ஒன்று கண்டேன்' என்று தலைப்பு வைக்கப்பட்டது. அந்த தலைப்பு இன்னமும் அவரது பெயரிலேயே பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் அடிபடுகிறது.