விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் |
த்ரிஷாவை தொடர்ந்து, நிக்கி கல்ராணியும், நாய்க்குட்டி பிரியையாக உருவெடுத்துள்ளார். தன் வீட்டில் ஆசை ஆசையாக, நாய்க்குட்டிகளை வளர்த்து வரும் நிக்கி, படப்பிடிப்பு இல்லாத நேரங்களில், இந்த நாய்க்குட்டிகளுடன் விளையாடுவதைத் தான், பொழுதுபோக்காக வைத்துள்ளார். மொட்ட சிவா கெட்டா சிவாவை தொடர்ந்து, கவுதம் கார்த்திக் ஜோடியாக, ஹர ஹர மஹாதேவகி என்ற படத்திலும், மரகதமணி என்ற படத்திலும் நடித்து வருகிறார். ஆனாலும், டீம் - 5 என்ற மலையாளப் படத்தின் வரவைத் தான், மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறாராம் நிக்கி; இதில், இவர், சர்ச்சைக்குரிய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்துக்கு ஜோடியாக நடித்துள்ளது தான், இதற்கு காரணம். இந்த படத்தின் வரவை, நிக்கி மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மலையாள பட உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கிறது. 'தமிழில், பல படங்களில் நடித்து வருகிறேன். டீம் - 5 வெற்றி பெற்றால், மலையாளத்திலும் முன்னணி இடத்தை பிடித்து விடுவேன்' என்கிறார் நிக்கி. குறைவான சம்பளம், தாராளமான கவர்ச்சி என்ற, அவரது பாலிசி, பட உலகினருக்கு பிடித்து விட்டது தான், நிக்கிக்கு அதிக படங்கள் புக் ஆவதற்கு காரணமாம்.