Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சமூகத்திற்கு நல்லது செய்ய நினைக்கிறேன் : விஷால் பேட்டி

23 பிப், 2017 - 04:07 IST
எழுத்தின் அளவு:
Vishal-speech-in-charitable-function

என்னை உயர்த்திய இந்த சமூகத்துக்கு மறுபடியும் நான் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் உதவி செய்து வருகிறேன் என தெரிவித்துள்ளார், நடிகர் விஷால்.

சிதம்பரம் மாவட்டம் பிச்சாவாரத்தில் உள்ள பள்ளி விழாவில் “ துப்பறிவாளன் “ திரைப்படத்தின் படபிடிப்பில் இருந்த நடிகர் விஷால் மற்றும் பிரசன்னா கலந்து கொண்டனர். இவர்களோடு ஆபர் தொண்டு நிறுவன தலைவி நடிகை பூங்கோதை கலந்துகொண்டார். தென்னிந்திய நடிகர் சங்கமும் , ஆபர் தொண்டு நிறுவனமும் இணைந்து எம்.ஜி.ஆர் நகர் மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி செய்தனர். விஷால் மாணவர்களுக்கு காலணிகள் , நோட்டு புத்தகங்கள் , சீருடைகள் வழங்கிய பின் பேசினார். அவ்விழாவில் விஷால் பேசியது ;


ஒவ்வொரு முறை ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும் போது அங்கே நாம் எதற்காக போகிறோம், என்ன செய்ய போகிறோம், நாம் அங்கு செல்வதனால் அவர்களுக்கு என்ன பலன் கிடைக்க போகிறது என்பதை அலசி பார்த்து தான் எல்லா நிகழ்ச்சிக்கும் நான் செல்கிறேன். நான் இங்கு இருந்து கிளம்பியவுடன் எனக்கு அணிவித்த இந்த சால்வைகளை எல்லாம் விற்று அதிலிருந்து கிடைக்கும் பணத்தில் இன்னும் ஒரு குழந்தையை படிக்க வைக்க போகிறேன். எனக்கு பிடிக்காத ஒரு விஷயம் சால்வை அணிவிப்பது. முதலில் மாணவர்களாகிய நீங்கள் தான் இந்த மேடையில் அமர வேண்டும். நான் உங்கள் இடத்தில் அமர்ந்து பேச வேண்டும். உங்களுக்கு தான் இந்த மேடை. நான் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை இங்கே நின்று பேசுவதற்கு. நான் இந்த கிராம மக்களுக்கு மட்டும்மல்ல காதால் கேட்கும் விஷயங்களுக்கும் , கண்ணால் பார்க்கும் விஷயங்களுக்கும் முடிந்த அளவிற்கு உதவி செய்கிறேன்.


நான் உதவி செய்வது பெரிய விஷயம் அல்ல. இந்த பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவி வயதான பெண்மணி ஒருவருக்கு உதவி செய்துள்ளார். இது மிகப்பெரிய ஒரு விஷயமாகும். நான் வளர்ந்து இந்த நிலைக்கு வந்த பிறகு தான் அனைவருக்கும் உதவி செய்கிறேன். நான் நல்ல நிலைக்கு வர நீங்கள் தான் காரணம் , நீங்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி என் படத்தை பார்ப்பதனால் தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன். என்னை நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ள இந்த சமூகத்துக்கு ஏதாவது நாம் நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு நான் உதவி வருகிறேன். என்னை பாராட்டுவதை விட எட்டாம் வகுப்பு படிக்கும் போதே பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டுள்ள இந்த மாணவியை பாராட்டுவது தான் சரியாக இருக்கும் என்றார் விஷால்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)