தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் | பிளாஷ்பேக்: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை இசை அமைப்பாளராக்கிய ஸ்ரீதர் |
அகமது இயக்கத்தில் ஜீவா நடிக்கும் புதிய படத்திற்கு காதலிக்க நேரமில்லை என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இந்த படத்திற்கு தலைப்பை முடிவு செய்த பின்னர் சில சிக்கல்கள் எழுந்துள்ளன. அதாகப்பட்டது, இனிமேல் பழைய பட தலைப்புகளை யார் வைத்தாலும், சம்பந்தப்பட்ட பட தயாரிப்பாளரிடமிருந்தோ அல்லது அவர்களின் வாரிசுகளிடமிருந்தோ நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் வாங்கி வர வேண்டும். இல்லையென்றால் அந்த தலைப்புக்கு அனுமதி இல்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியிருப்பதால் சிக்கலில் மாட்டியிருக்கிறார்கள் ஜீவாவும், அகமதுவும்.
காதலிக்க நேரமில்லை படத்தை இயக்கிய ஸ்ரீதர் தற்போது உயிரோடு இல்லை. அவரது உறவினர்களிடம் இந்த சர்டிபிகேட்டை வாங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறதாம். இதுவாவது பரவாயில்லை, படத்தில் ஜீவாவுடன் ஜோடி சேரும் நடிகையை தேடியே நெடும்பயணம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தீக்ஷா சேத், தமன்னா, ரிச்சா கங்கோபாத்யா என பலரும் படத்தில் நடிக்க மறுத்துவிட, வேறு வழியில்லாமல் புதுமுகங்களை தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.