பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தை எதிர்த்து வழக்கு | அன்று ரஜினி படத்தில் அவரது மகன், இன்று அவருடன் போட்டி | பிளாஷ்பேக் : தஸ்தாவெஸ்கி வாழ்க்கையின் தாக்கத்தில் உருவான 'முதல் மரியாதை' | தமிழ் ரசிகர்கள் திறமையை அங்கீகரிப்பவர்கள் : அர்ஷா பைஜு | பிளாஷ்பேக் : நம்பியாரை நாயகன் ஆக்கிய 'கல்யாணி' | மலைவாழ் மக்களின் கல்வியை வலியுறுத்தும் 'நறுவீ' | பிரபல டிசைனர் குமார் காலமானார் | ‛கூலி, வார் 2' ஜெயிப்பது யார்? | கூலி : ஆந்திராவில் மட்டுமே டிக்கெட் கட்டண உயர்வுக்கு அரசு அனுமதி | ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்த போனி கபூர் |
இயக்குனர் பாரதிராஜா, இசை அமைப்பாளர் இளையராஜா ஆகியோரோடு சினிமாவுக்கு வந்தவர் அன்னக்கிளி செல்வராஜ். இன்னும் சொல்லப்போனால் இவர்களுக்கு முன்பே வந்தவர் செல்வராஜ். இளையராஜாவும், பாரதிராஜாவும் இவரது அறையில் தங்கி இருந்துதான் வாய்ப்பு தேடினார்கள். அந்தக் காலத்திலேயே நீ இசை அமைப்பாளர், நீ இயக்குனர், நான் கதாசிரியர் என்று பிரித்துக் கொண்டனர்.
ஒரே நாளில் நான்கைந்து படத்துக்கு கதை தயார் செய்பவராக இருந்தார் செல்வராஜ். எஸ்.பி.முத்துராமன் இயக்கிய எங்கம்மா சபதம் தான் செல்வராஜ் சினிமாவுக்கு எழுதிய முதல் கதை. அதன் பிறகு அன்னக்கிளி, கிழக்கே போகும் ரெயில், கடலோர கவிதைகள், புதிய வார்ப்புகள், என பாரதிராஜாவின் ஆஸ்தான கதாசிரியராக இருந்தார். பிற்காலத்தில் சாதனை படைத்த அலைபாயுதே, சின்னக்கவுண்டர், முதல் மரியாதை கதைகளும் செல்வராஜுடையது. இதுவரை 100 கதைகளுக்கு மேல் எழுதியுள்ளார்.
கதாசிரியராக இருந்த செல்வராஜ் பொண்ணு ஊருக்கு புதுசு படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அதன் பிறகு நீதானா அந்தக்குயில், அகல் விளக்கு, பகதிபுரம் ரெயில்வே கேட் உள்பட 18 படங்களை இயக்கினார். கதாசிரியராக வெற்றி பெற்ற செல்வராஜால் இயக்குனராக வெற்றி பெற முடியவில்லை. அன்னக்கிளி செல்வராஜ் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஒரு அங்கம். இளையராஜா, பாரதிராஜா அளவிற்கு புகழ் பெறாவிட்டாலும் அவர்கள் அளவிற்கு தமிழ் சினிமாவிற்கு தன் பங்களிப்பைச் செய்தவர்.