'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ஜல்லிகட்டுக்கு எதிரான போராட்டம் புரட்சியாக மாறி உள்ள நிலையில் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு எதிரான உணர்வும் தலைதூக்கி உள்ளது. போராட்ட களத்தில் வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் கொட்டி போராட்டம் நடத்தி வருகிறார்கள். எவ்வளவு தாகமாக இருந்தாலும் அதை குடிக்க மறுத்து வருவதோடு அதை கொண்டு வருபவர்களையும் துரத்தியடிக்கிறார்கள்.
இதனால் இனி கடைகளில் வெளிநாட்டு குளிர்பானங்களை விற்க மாட்டோம் என்று வியாபாரிகள் அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து தியேட்டர் கேன்டீன்களில் இனி வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பதில்லை என்ற முடிவை தியேட்டர் அதிபர் சங்கமும் எடுக்க இருக்கிறது. சங்கத்தின் முடிவுக்கு முன்பே மதுரை, ராமநாதபுரம், விருது நகர் மாவட்டங்களில் உள்ள பல தியேட்டர்களில் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தடைவிதித்து உள்நாட்டு குளிர்பானங்களை விற்கத் தொடங்கி விட்டனர். விரைவில் கூட இருக்கும் தியேட்டர் அதிகபர்கள் சங்க செயற்குழுவில் இதற்கான முடிவு அறிவிக்கப்பட இருப்பதாக சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.