அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு |
இயக்குனர் கவுதம் மேனனின் தங்கை உத்தாரா மேனன். தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் ஸ்டைலிஸ்டாக வளர்ந்து வருகிறார். அதாவது கதைக்கு ஏற்றபடி படத்தில் நடிக்கும் ஹீரோக்களை எப்படி ஸ்டைலாக காட்டுவது அதற்கு எந்த மாதிரியான உடைகைள தயார் செய்து கொடுப்பது என்கிற வேலை. காஸ்ட்யூம் டிசைனிங், மேக்அப், இண்ட்டீரியர் டெக்கரேஷன் அடங்கிய பணி.
உத்தாரா மேனனின் கணவர் ரகு முத்தையா விளம்பர பட இயக்குனர். அவரது படங்களில் ஸ்டைலிஸ்டாக பணியாற்றினார். அதன் பிறகு கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தின் மூலம் சினிமாவிலும் ஸ்டைலிஸ்டாக அறிமுகமானார். அதன் பிறகு அச்சம் என்பது மடமையடா, படத்தில் பணியாற்றினார். இப்போது என்னை நோக்கி பாயும் தோட்டாவில் பணியாற்றி வருகிறார். அண்ணன் படங்கள் தவிர மற்ற படங்களிலும் பணியாற்றும் ஆர்வத்தில் இருக்கிறார். அஜித், சிம்பு, தனுஷ் ஆகியோர் தங்களது அடுத்த படங்களுக்கும் உத்தாராவையே சிபாரிசு செய்கிறார்களாம்.