மீண்டும் சிவகார்த்திகேயனிடம் கதை சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ் | பைசன் படத்தின் 2வது பாடல் வெளியானது | ‛யாத்திசை' இயக்குனருடன் இணையும் ரவி மோகன் | பிளாஷ்பேக்: பாலுமகேந்திரா ஓவியமாய் தீட்டிய முதல் திரைக்காவியம் “கோகிலா” | அக். 10ல் ஒளிபரப்பாகும் ‛வேடுவன்' வெப் தொடர் | மதராஸி ஓடிடி வெளியீடு எப்போது | சிம்புதேவன் இயக்கத்தில் விமல்? | 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் அட்டகாசம் | ‛சூர்யா 46' படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடியா? | வேறொருவரை வைத்து தெலுங்கு டப்பிங்: 'கிஸ்' இயக்குனர் மீது விடிவி கணேஷ் அதிருப்தி |
சமூக வலைதளமான, டுவிட்டர் வாயிலாக பாலியல் தொல்லை தரும், மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி, போலீசில் நடிகை ஸ்ருதி புகார் அளித்து உள்ளார்.
நடிகர் கமலஹாசன் - சரிகா தம்பதியின் மூத்த மகள் ஸ்ருதி; நடிகை. தமிழில் ஏழாம் அறிவு உட்பட, பல படங்களில் நடித்துள்ளார். அவர் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பிரவீன் ஆண்டனி என்பவர் அளித்துள்ள புகார்: தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் ஸ்ருதி. பாடகர், இசை அமைப்பாளர் என்றும் அறியப்பட்டவர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த குருபிரசாத் என்பவர், சமூக வலைதளமான டுவிட்டர் பக்கத்தில் ஸ்ருதி மீது அவதுாறு பரப்பும் வகையிலான படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டு வருகிறார்.அத்துடன், மன ரீதியாக ஸ்ருதிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். ஸ்ருதியின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும், குருபிரசாத் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.