Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமலை பிரிந்தார் கவுதமி - மனவருத்தத்தில் இந்த முடிவை எடுத்ததாக அறிவிப்பு

01 நவ, 2016 - 14:24 IST
எழுத்தின் அளவு:
Kamal---Gautami-life-comes-to-end

நடிகர் கமல்ஹாசன் உடன் 13 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த நடிகை கவுதமி, இப்போது மிகுந்த மனவருத்தத்துடன் அவரை பிரிவதாக அறிவித்துள்ளார். கமலுடன் உறவை துண்டிப்பது இதயம் நொறுங்குவது போன்று உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.


குருசிஷ்யன் படத்துடன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கவுதமி. ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பலருடன் சினிமாவில் ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.


கமலும், கவுதமியும் முதன்முறையாக அபூர்வ சகோதரர்கள் படத்தில் இணைந்து நடித்தனர். அதன்பின்னர் தேவர் மகன், குருதிப்புனல், பாபநாசம் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர். கவுதமி, சந்தீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற மகள் உள்ளார். கவுதமி-சந்தீப் இடையேயான திருமண உறவு நீடிக்கவில்லை, இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் உடனான கொண்ட நட்பில் அவருடன் வாழ தொடங்கினார்.


கமலும் நடிகை சரிகாவை பிரிந்த பின்னர் கவுதமியுடன் வாழ தொடங்கினார். கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கமலும், கவுதமியும் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். தற்போது கமலின் படங்களில் காஷ்ட்யூம் டிசைனராகவும், பாபநாசம் படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவருடன் ஜோடியாகவும் நடித்தார்.


இந்நிலையில் கமல் உடன் வாழ்ந்து வந்த உறவை முறித்து கொள்வதாக நடிகை கவுதமி தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இதுப்பற்றி கவுதமி கூறியிருப்பதாவது...


இதயம் நொறுங்குவது போன்று உள்ளது


‛‛மிகுந்த மனவருத்தத்தில் இந்த முடிவை எடுத்துள்ளேன். கமல் உடன் வாழ்ந்து வந்த வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. தனிப்பட்ட சில காரணங்களால் இந்த முடிவை எடுத்துள்ளேன். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகவே இதுப்பற்றி யோசித்து வந்தேன். முக்கியமாக, முதலில் நான் ஒரு தாய். என் மகளுக்கு சிறந்த தாயாக இருக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. என் மகளுக்காகவே அவரின் எதிர்காலம் கருதியே இந்த முடிவை எடுத்துள்ளேன். கமலுடன் உறவை துண்டிப்பது இதயம் நொறுங்குவது போன்று உள்ளது.


ரசிகையாக தொடர்வேன்


நான் யாரையும் குறை சொல்லவோ, அனுதாபம் தேடுவதோ என் நோக்கம் அல்ல. 29 ஆண்டுகாலம் கமல் உடனான நட்பில் நிறைய கற்று கொண்டேன். இக்கட்டான நேரங்களில் எனக்கு உறுதுணையாக இருந்தவர் கமல். 13 ஆண்டுகாலம் சேர்ந்து வாழ்ந்து இப்போது பிரிந்தாலும், கமலின் ரசிகையாக என்றும் தொடர்வேன். கமலின் படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியபோது அவரிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்று கொண்டேன். இதுவரை அவர் செய்துள்ள சாதனைகள் ஏராளம், இன்னும் அவர் பல சாதனைகள் புரிவார், அவருக்கு வாழ்த்து சொல்ல நான் காத்திருக்கிறேன்.


ரசிகர்களுக்கு நன்றி


ரசிகர்களாகிய நீங்கள் என் வாழ்க்கை பயணத்தில் ஒரு அங்கமாய் இருந்துள்ளீர்கள். உங்கள் மத்தியில் என்னால் இயன்றவரை எல்லா நேரங்களிலும் எனது வாழ்க்கையை கண்ணியத்துடன் வாழ்ந்தவள் என்பதால் இந்த தருணத்தில் என் வாழ்வில் நடப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கடந்த 29 ஆண்டுகளாக உங்களிடமிருந்து ஏராளமான அன்பையும், ஆதரவையும் பெற்றுள்ளேன். என் வாழ்க்கையின் இருள்சூழ்ந்த, வலியான காலங்களில் என்னை வழிநடத்தியதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.


இவ்வாறு கவுதமி கூறியுள்ளார்.


நடிகர் கமல்ஹாசன், நடிகை வாணி கணபதியை 1978-ம் ஆண்டு, திருமணம் செய்தார். இந்த திருமணம் 10 ஆண்டுகள் தான் நீடித்தது. 1988-ல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன்பின்னர் கமல் அந்தாண்டே பாலிவுட் நடிகை சரிகாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷ்ராஹாசன் என்ற இரு மகள்கள் உள்ளனர். சரிகா உடனான திருமண வாழ்வு 16 ஆண்டுகள் நீடித்தது, 2004-ல் விவாகரத்து பெற்று கமலும், சரிகாவும் பிரிந்தனர். அதன்பின் நடிகை கவுதமியுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இப்போது அதுவும் முடிவுக்கு வந்துள்ளது.Advertisement
கருத்துகள் (21) கருத்தைப் பதிவு செய்ய
நாலு பேருக்கு முன் உதாரணமாக இருக்க ஆசைப்படுகிறேன் : சந்தானம்நாலு பேருக்கு முன் உதாரணமாக இருக்க ... நடிகர் விக்ரமின் தந்தை காலமானார் நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (21)

Rajini Murugan - Chennai,இந்தியா
02 நவ, 2016 - 11:01 Report Abuse
Rajini Murugan ஏன்டா உங்களுக்கு வேற வேலையே இல்லியா ? இந்த செய்தி நாட்டுக்கு ரொம்ப முக்கியமா? இவங்க ஒன்னு சேர்த்தப்ப இப்படி சொன்னார்களா?
Rate this:
Shanu - Mumbai,இந்தியா
02 நவ, 2016 - 10:37 Report Abuse
Shanu தற்போதைய செய்தி, கமலுக்கு வேறு ஒரு நடிகையுடன்.....அவருடன் நடித்த நடிகை. வேறு ஒரு செய்தி தாளில் உள்ளது. இவன் ஒரு மனுஷன் என்று திரை உலகம் நம்புகிறது. இவனது படத்தை புறக்கணிக்க வேண்டும். இவனுக்கு அடுத்த பத்து வருடத்திற்கு ஆள் கிடைத்து விட்டது...
Rate this:
ezhumalaiyaan - Chennai,இந்தியா
02 நவ, 2016 - 05:07 Report Abuse
ezhumalaiyaan தமிழக அரசியல் தலைமை பொறுப்பை ஏற்க தகுதியானவர் கமல்..
Rate this:
G.Loganathan - Coimbatore,இந்தியா
02 நவ, 2016 - 04:55 Report Abuse
G.Loganathan கமல், கவலை படமாட்டீர்கள் - படாதீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே. யாரோ ஒருவர் உங்களுக்காக காத்திருக்கிறார். கடவுள் ( உங்களுக்கு பிடிக்காதவர் ) எல்லா கதவுகளையும் மூடுவதில்லை.
Rate this:
Thiyagarajan Srimbhs - Coimbatore,இந்தியா
02 நவ, 2016 - 04:39 Report Abuse
Thiyagarajan Srimbhs இவ்ர்கள் பிரிவு சங்கடமாக உள்ளது. நம்ம லஷ்மி ராமக்ரிஷ்ணன் விசாரிக்க வேண்டும். மிக அவசரம்
Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Asuraguru
  • அசுர குரு
  • நடிகர் : விக்ரம் பிரபு
  • நடிகை : மகிமா நம்பியார்
  • இயக்குனர் :ராஜ்தீப்
  Tamil New Film Sathru
  • சத்ரு
  • நடிகர் : கதிர்
  • நடிகை : சிருஷ்டி டாங்கே
  • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
  Tamil New Film Kallapart
  • கள்ளபார்ட்
  • நடிகர் : அரவிந்த் சாமி
  • நடிகை : ரெஜினா
  • இயக்குனர் :ராஜபாண்டி
  Tamil New Film Kannitheevu
  • கன்னித்தீவு
  • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
  • இயக்குனர் :சுந்தர் பாலு
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in