தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! | விஜய் அரசியல் வருகை குறித்து நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி பதில்! | விக்ரம் 63 படத்தின் புதிய அப்டேட்! | கவிஞர் முத்துலிங்கத்தின் பாராட்டு விழா: திரைப்பிரபலங்கள் பங்கேற்பு | திருமண நிச்சயதார்த்தம் நடந்தது: வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அபிநயா! |
இலங்கையில் நடந்த இறுதிப்போரின் போது விடுதலைபுகளில் வானொலி செய்தி வாசிப்பாளராக இருந்த இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து போர்க்களத்தில் ஒரு பூ என்ற தலைப்பில் ஒரு திரைப்படத்தைகே.கணேசன் என்பவர் இயக்கினார். இதனை ஏ.சி.குருநாத் என்பவர் தயாரித்தார்.
படத்தை பார்த்த தணிக்கை குழுவினர். படத்தில் வன்முறை காட்சிகள், பாலியல் பலாத்கார காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி படத்திற்கு சான்றிதழ் தர மறுத்து விட்டனர். இதை எதிர்து மறு தணிக்கைக்கு தயாரிப்பாளர் சென்றார். அங்கும் அனுமதி மறுக்கப்பட்டது. தணிக்கை குழுவின் அனுமதி மறுப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் இசைப்பிரியாவின் சதோரி தர்மினி, தாயர் டி.வேதரஞ்சினி ஆகியோர், இசைப்பிரியாவின் வாழ்க்கை கதையை படமாக எடுக்க யாரும் எங்களிடம் அனுமதி பெறவில்லை. இசைப்பிரியாவின் வாழ்க்கையை படத்தில் தவறாக சித்தரித்துள்ளனர். மேலும் நாங்கள் வெளிநாட்டில் அகதிகளாக வாழ்கிறோம். படம் வெளிவந்தால் எங்களுக்கு சிக்கல் வரும் எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தணிக்கை குழுவின் சான்றிதழ் மறுக்கும் அளவிற்கு படத்தில் வன்முறை காட்சிகள் இருக்கிறது. மேலும் சம்பந்தப்பட்டவரின் தாயும், சகோதரியும் படத்துக்கு தடை கேட்டு கொடுத்துள்ள மனுவையும் நீதிமன்றம் ஏற்கிறது. எனவே படத்தை பொதுமக்களுக்கு தடையிட்டு காட்ட இந்த நீதிமன்றம் தடை விதிக்கிறது. என்று தீர்ப்பளித்தது.