சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மணிவண்ணன், சீனு ராமசாமி ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ்.நிரோஜன் இயக்கி உள்ள படம் கூட்டாளி. இவர் வெளிநாட்டில் வாழும் இலங்கை தமிழர். புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படத்தை பகலவன் ஒளிக்கூடம் சார்பில் எஸ்.சூரிய குமார் தயாரித்துள்ளார். பழனி இசை அமைத்துள்ளார், இளங்கோ கலைவாணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இலங்கை இறுதி போரில் ஒரு வேளை இலங்கை ராணுவம் தோற்று விடுதலைபுலிகள் வெற்றி பெற்றிருந்தால் என்ன மாற்றங்கள் வந்திருக்கும் என்பதை மையமாக கொண்டு தயாராகியுள்ள படம். இந்தப் படத்திற்கு இந்திய தணிக்கை குழு இந்தியாவில் திரையிட அனுமதி மறுத்து விட்டது. இதனால் வெளிநாடுகளில் படத்தை திரையிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன் முதல் கட்டமாக வருகிற 25ந் தேதி நார்வேயில் படத்தை வெளியிடுகிறது. அதைத் தொடர்ந்து மற்ற நாடுகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். நீதிமன்றத்தின் மூலம் படத்தை இந்தியாவில் திரையிடவும் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.