சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

ஒரு தலைராகம் ரவீந்தரை நினைவிருக்கிறதா? சுருள் தலைமுடி, வித்தியாசமான வசன உச்சரிப்பு, பிரமாதமான நடனம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்தார். ஒரு தலை ராகத்திற்கு பிறகு சகலகலாவல்லவனினில் கமலுக்கு வில்லனாகவும், தங்க மகனில் ரஜினிக்கு வில்லனாகவும் நடித்து புகழ்பெற்றார். அனல் காற்று, எச்சில் இரவுகள், பொய்கால் குதிரை, விடிஞ்சா கல்யாணம் உள்ளிட்ட பல படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்தார். தமிழில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் மலையாளத்தில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சத்யராஜ் நடித்த 6.2 படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
பல ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இரும்பு, சிமெண்ட் வியாபாரத்தின் மூலம் தொழிலதிபர் ஆனார். கேரளாவின் முன்னணி கட்டிட நிறுவனங்களில் ரவீந்திருடையதும் ஒன்று. பல இடங்களில் பெட்ரோல் பங்க்கும் வைத்துள்ளார். தொழிலதிபரான ரவீந்தர் மீண்டும் சினிமாவுக்கு வந்திருக்கிறார். கடந்த ஆண்டு எந்தும் எப்பொழுதும் என்ற படத்திற்கு கதை வசனம் எழுதினார். தற்போது படம் தயாரிக்கவும் முடிவு செய்திருக்கிறார்.
இதற்கிடையில் தமிழ்நாட்டில் கார்த்திக் சுப்புராஜ் குறும்படங்களுக்கென்று ஒரு அமைப்பு நடத்தி வருவது போன்று மலையாள குறும்பட இயக்குனர்களை ஊக்கப்படுத்தவும், உதவி செய்யவும் கொச்சி மெட்ரோ மலையாளம் ஷார்ட் பிலிம் பெஸ்டிவல் என்ற அமைப்பை தொடங்கி உள்ளார். சிறந்த குறும்படம் இயக்கி உள்ள இயக்குனர்களுக்கு தனது தயாரிப்பில் படம் இயக்க வாய்ப்பு வழங்க இருக்கிறார். ஆனால் மீண்டும் நடிப்பது பற்றி அவர் இன்னும் முடிவு செய்யவில்லை.




