சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்த 'தங்கமகன்' படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளிவந்தது. 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறது என்று அந்தப் படம் ஆரம்பமான போது சொல்லப்பட்டாலும், அப்படியெல்லாம் இல்லாமல் வேறு கதையாக, வேறு படமாகத்தான் படம் வெளிவந்தது. ஆனாலும் தனுஷுக்கு 'தங்கமகன்' எதிர்பார்த்த வெற்றியைத் தராமல் தோல்வியைத்தான் கொடுத்தது. அதற்குப் பிறகு சுமார் பத்து மாத இடைவெளிக்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள 'தொடரி' படம் இந்த வாரம் வெளியாக உள்ளது. இப்படம் முதலில் ஆரம்பிக்கப்பட்ட படம் என்பதால் தனுஷ் நடித்துள்ள மற்றுமொரு படமான 'கொடி' படம் முடிவடைந்த பின்னும் அதன் வெளியீடு தீபாவளிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
'மைனா, கும்கி' படங்களின் மூலம் வித்தியாசமான களங்களுடன் படங்களைக் கொடுக்கும் என்ற பெயரைப் பெற்ற இயக்குனரான பிரபு சாலமனுடன் தனுஷ் இணைந்த 'தொடரி' படம் ஆரம்பமான நாளிலிருந்தே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சிறிய நடிகர்களுடன் இணைந்து படங்களை இயக்கி வந்த பிரபு சாலமனுக்கும் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான தனுஷ் 'தொடரி' படத்திற்கு நாயகனாகக் கிடைத்துள்ளார். பிரபு சாலமன் இதற்கு முன் இயக்கி வெளிவந்த 'கயல்' படம் வெற்றி பெறாமல் போனது. அதனால் அவரும் 'தொடரி' படத்தை மிகவும் கவனத்துடன் இயக்கியுள்ளதாகச் சொல்கிறார்கள்.
'தொடரி' படம் வெற்றி பெறும் பட்சத்தில் அது இயக்குனர் பிரபு சாலமனுக்கும், தனுஷுக்கும் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தித் தரும் என்பது உறுதி.