இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
வண்டிச்சக்கரம், ரோசாப்பூ ரவிக்கைக்காரி போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளர் திருப்பூர் மணி(வயது 76), உடல்நலக்குறைவால் காலமானார். நடிகர் சத்யராஜின் திரைப்பயணத்தில் முக்கிய நபராக இருந்தவர் திருப்பூர் மணி. வண்டிசக்கரம் படத்தில் நடிகை சில்க் ஸ்மிதாவை அறிமுகம் செய்தவரும் இவர் தான். விவேகானந்தா பிக்சர்ஸ் சார்பில் விஜயகாந்த் நடித்த ‛ஈட்டி, சிவக்குமாரின் 100வது படமான ‛ரோசாப்பூ ரவிக்கைக்காரி, ‛ஆணிவேர், ‛வண்டிச்சக்கரம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்திருக்கிறார்.
சென்னையில் வசித்து வந்த அவர், உடல்நலக்குறைவால் இன்று(செப்.,10ம் தேதி) காலமானார். அவருக்கு பத்மாவதி என்ற மனைவியும், விவேகானந்தன், பிரேமானந்தன் என்ற மகனும் உள்ளனர். மணியின் மரண செய்தியை அறிந்து நடிகர் சத்யராஜ் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மாலையில் அவரது இறுதிசடங்குகள் நடக்கிறது.