புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
இது என்ன மாயம், ரஜினி முருகன், தொடரி படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் தற்போது விஜய்யின் 60வது படத்தில் மெயின் ஹீரோயினாக நடிப்பதோடு, தெலுங்கிலும் 3 படங்களில் கமிட்டாகியிருக்கிறார். அதோடு இதற்கு முன்பு நடித்த படங்களில் அவருக்கு காஸ்டியூம்களில் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஆனால், விஜய் படத்தில் இதுவரையில்லாத அளவுக்கு கீர்த்தி சுரேஷை பளிச்சிடும் காஸ்டியூம்களில் ஜொலிக்க வைத்து வருகிறார்களாம்.
குறிப்பாக, பாடல் காட்சிகளில் அவரை அழகு மிளிர நடிக்க வைத்து வருகிறார்களாம். அந்த ஆடைகளில் ஓரளவு கிளாமராகவும், இளைஞர்களை சுண்டியிழுக்கும் வகையிலும் ஜொலிக்கிறாராம் கீர்த்தி சுரேஷ். அந்த வகையில், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் அணிந்துள்ள ஆடைகளுக்கு பெரிய பட்ஜெட் செலவு செய்திருக்கிறார்களாம். இப்படி முதன்முறையாக அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் தன்னை விஜய் படத்தில் காண்பித்து வருவதால், பாடல் காட்சிகளை படமாக்கியபோது, தன்னை விதவிதமான கோணங்களில் ஏராளமான செல்பிகளை எடுத்து வைத்துள்ளாராம் கீர்த்தி சுரேஷ்.