விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் |
பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்களில் ஸ்ரீராம், ஏற்கெனவே சில படங்களில் ஹீரோவாக நடித்து விட்டார். தற்போது நடித்தும் வருகிறார். இன்னொருவரான கிஷோர் பசங்க படத்திற்கு பிறகு வஜ்ரம், கோலிசோடா உள்பட சில படங்களில் நடித்தார். தற்போது கிஷோரும் தனி ஹீரோவாகிவிட்டார்.
சினேகம் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் சி.பழனி, ஆர்.அய்யனார் இணைந்து தயாரிக்கும் எதிர்கொள் என்ற படத்தில் கிஷோர் ஹீரோவாக நடிக்கிறார். புதுமுகம் மேக்னா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்கள் தவிர சர்மிளா, காளிவெங்கட், அஜய், சிவசங்கர் மாஸ்டர் உள்பட பலர் நடிக்கிறார்கள். தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆர்.அய்யனார் இயக்குகிறார். ஜூட்லினிக்கர் இசை அமைக்கிறார். பாண்டி அருணாசலம் ஒளிப்பதிவு செய்கிறார். இது பள்ளி மாணவர்களின் காதல் படம் என்கிறார் இயக்குனர் அய்யனார்.
அவர் மேலும் கூறியதாவது: 12வது படிக்கும் மாணவனுக்கும் 10வது படிக்கும் மாணவிக்குமான காதலை மையமாக கொண்ட படம். பதின்ம வயதில் வரும் காதலையும், அதனால் வரும் பிரச்சினையையும் பேசுகிற படம். அப்பா மகன் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அந்த உறவின் உன்னதம் பற்றியும் சொல்லும் படம். பொறுப்பற்றவனாக கருதப்படும் ஒருவன் தக்க சமயத்தில் எப்படி பொறுப்புடன் உயர்ந்த நிலைக்கு வருகிறான் என்பதையும் காட்டும் படம் என்கிறார் அய்யனார்.