விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் |
தமிழ் சினிமாவில் விக்ரமிற்கென்று ஒரு தனி இடம் உண்டு. சேது, பிதாமகன், அந்நியன், காசி, ஐ, தெய்வத்திருமகள் என ஒவ்வொரு படங்களிலுமே ஒவ்வொரு விதமான கோணத்தில் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் இப்போது இருமுகன் படத்திலும் திருநங்கை வேடத்தில் தன்னை இன்னொரு புதிய பரிமாணத்தில் வெளிப்படுத்தி வருகிறார் விக்ரம். அந்த வகையில், நீண்ட நாளைக்குப்பிறகு இந்த படத்தில் விக்ரமின் இன்னொரு முகத்தை பார்க்கலாம் என்கிறார்கள்.
இதுகுறித்து விக்ரம் கூறியுள்ளதாவது... நான் சில படங்களை சீக்கிரமே முடித்து விடுகிறேன். சில படங்களுக்காக வருடக்கணக்கில் உழைக்கிறேன். அப்படி உழைத்த படங்கள் சில சமயங்களில் ஏமாற்றி விடுகின்றன. ஆனால், இனிமேல் நான் நடிக்கிற ஒவ்வொரு படங்களுமே தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஏமாற்றம் கொடுக்காத படங்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மேலும், நான் படங்களின் எண்ணிக்கையை மனதில் கொள்ளாமல் தரத்தை மட்டுமே மனதில் கொண்டுதான் ஓகே செய்து வருகிறேன். அதற்காக உடலை வருத்தி நடிப்பதற்கும் தயாராக இருக்கிறேன். அதனால்தான் நான் நடிக்கிற படங்கள் வெளியாவதற்கு அதிக டயம் தேவைப்படுகிறது என்கிறார் விக்ரம்.