அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
பசி படத்தின் மூலம் புகழ்பெற்றவர் சத்யா. குணசித்ர நடிகை. வீடு, மறுபடியும், மறுபக்கம், என் உயிர் தோழன், டூயட் உள்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர், நாடகம் மற்றும் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார். தற்போது குற்றமே தண்டனை, தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் உள்பட 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். தென்னிந்திய நடிகர் சங்க செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகித்து வருகிறவர்.
பசி சத்யாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடடியாக அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிக்சை அளித்தனர். அவரது இருதயத்தில் இருந்த அடைப்புகள் சரி செய்யப்பட்டது. அபாயகட்டத்தை தாண்டியுள்ள பசி சத்யா, தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.