Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாபத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் -டைரக்டர் ராம்

15 அக், 2015 - 11:49 IST
எழுத்தின் அளவு:
Director-Rams-sentimental-talk

கற்றது தமிழ், தங்கமீன்கள் படங்களைத் தொடர்ந்து தரமணி படத்தை இயக்கி வருகிறார் ராம். முதல் படத்திற்கும் இரண்டாவது படத்திற்குமிடையே ஆறு வருட இடைவெளி கொடுத்து அவர், தனது மூன்றாவது படத்தை இடைவெளி கொடுக்காமல் எடுத்து வருகிறார். இந்நிலையில், தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ள மெல்லிசை படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டார் ராம். அப்போது தனது உதவியாளரை பாராட்டிய அதேசமயம், அப்பட நாயகன் விஜயசேதுபதியையும் மனதார பாராட்டினார்.

அப்போது ராம் கூறும்போது,


முதல் மழை, முதல் ரயில், முதல் முத்தம், முதல் இச்சை, முதல் காமம், முதல் காதல் இவையெல்லாம் தரக்கூடிய பரவசத்தைவிட ஒரு இயக்குனருக்கு அவரது முதல் படம் தரக்கூடிய பரவசம் சிறப்பானது. அவருக்கு என் வாழ்த்துக்கள். அதோடு, என்னுடைய உதவியாளர் என்கிற முறையில் இந்த படத்தை இயக்கிய அவர் எனக்கு தந்திருக்கிற பரவசம் அதைவிட சிறப்பானது.


2004ல் உள்ளே இருந்து சில குரல்கள் -என்ற கோபிகிருஷ்ணனின் புத்தகத்தோடு என்னிடம் வந்தார் ரஞ்சித் ஜெயக்கொடி. கவிதை, தமிழ் இலக்கியம் தெரிந்தவர். உலக சினிமாவை பார்க்கக்கூடியவர். கிராமத்திலுள்ள வன்மம், கோபம், காதல், கவிதை எல்லாம் கலந்த ஒரு படைப்பாளி. அது அவரது இந்த மெல்லிசை படத்தின் ட்ரெய்லரிலேயே தெரிகிறது. இந்த நகரத்துல சுவராஸ்யமா வாழலாம். ஆனா நிம்மதியா வாழ்ந்துட்டு இருக்கீங்களா என்று கேட்கிற ஒரு கேள்வி. அந்த வரி ஒன்றே போதும் ரஞ்சித்துக்கு வாழ்த்துக்கள்.


அடுத்து, யாருடைய தயவும் இல்லாமல், யாருடைய சிபாரிசும் இல்லாமல் தானாக முளைத்த ஒரு காட்டு மரம் விஜயசேதுபதி. அந்த காட்டு மரம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வந்தா மலை போனா சென்சாரில் கட் பண்ணக்கூடிய அந்த வார்த்தையை போல் இருப்பவர். எந்தமாதிரி கதைகளையும் மிகத்துணிச்சலுடன் செய்பவர்.


இதற்குதானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா பண்ணக்கூடிய அதே நேரத்தில் பண்ணையாரும் பத்மினியும், ஆரஞ்சு மிட்டாய், நானும் ரவுடிதான் போன்ற படங்களையும் பண்ணினார். மேலும், யாருடைய தயவும் இல்லாமல் வந்த வர்களுக்குத்தான், புதியவர்களையும் புதிய விசயங்களையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனோதிடமும், தைரியமும் இருக்கும். அது விஜயசேதுபதியிடம் இருக்கிறது. இது அவரை தமிழ் சினிமாவின் உச்சத்துக்கு எடுத்து செல்லும். அந்தவகையில், நிஜமாலுமே விஜயசேதுபதி ஒரு ரவுடிதான் என்றார்.


மேலும், காத்திருப்பதே தவம், காத்திருத்தலே கலை என்று நான் ஏன்டா சொன்னேன்னு இருக்கு. ஏனென்றால், எனது படங்களை 75 நாட்களில் எடுத்து விடுகிறேன். ஆனால் படங்கள் வெளியாக 3 வருடங்கள் ஆகி விடுகிறது. என்னுடைய அந்த சாபம் எனது உதவி இயக்குனர்களையும் பின்தொடர்கிறது. இந்த சாபத்தில் இருந்து நானும், எனது உதவி இயக்குனர்களும் தப்பிக்க வேண்டும் என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)