Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கவுதமி புகழ் பாடும் த்ரிஷா!

30 செப், 2015 - 11:51 IST
எழுத்தின் அளவு:
Trisha-praising-Gauthami

ஸ்லீப்லெஸ் நைட் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக்தான் கமலின் தூங்காவனம். முறைப்படி ரைட்ஸை வாங்கிதான் படமாக்கியுள்ளார்களாம். ஒரு இரவில் நடக்கும் கதையில் உருவாகியிருக்கும் இந்த படத்தை கமலின் உதவியாளர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ளார். த்ரிஷா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் பாபநாசம் படத்தில் பெண் போலீஸ் ஐஜியாக நடித்த ஆஷா சரத் கமலின் மனைவியாக நடித்துள்ளார். ஆனால் பாபநாசம் படத்தில் கமலின் மனைவியாக நடித்த கெளதமி இந்த படத்தில் காஸ்ட்யூடிசைனராக ஒர்க் பண்ணியுள்ளார்.


குறிப்பாக, த்ரிஷாவின் அழகு விசயத்தில் அதிக அக்கறை காட்டியுள்ளார் கெளதமி. ஹாலிவுட் படத்தில் நாயகியாக நடித்தவர் ஒவ்வொரு காட்சிகளிலும் எந்த மாதிரியான காஸ்டியும் அணிந்து நடித்திருந்தாரோ அதற்கும் மேலாக த்ரிஷாவுக்கான காஸ்டியூம்களை ரெடி பண்ணி நடிக்க வைத்துள்ளாராம். அதோடு, அந்த காஸ்டியூக்கு ஏற்ற மேக்கப் போட்ட பிறகே கேமரா முன்பு த்ரிஷா செல்ல அனுமதித்தாராம் கெளதமி.


இதுபற்றி த்ரிஷா கூறுகையில், இதுவரை 49 படங்களில் நடித்த என்னை இந்த அளவுக்கு எந்த படத்திலும் புதுமையான காஷ்ட்யூம் அணிந்து நடிக்க வைக்கவில்லை. ஆனால் எனது 50 வது படமான தூங்காவனத்தில் என்னை தேவதை போன்று அலங்கரித்து விட்டார் கெளதமி. என்னை இவ்வளவு அழகாக காண்பித்ததற்காக அவருக்கு நான் பெரிய நன்றி சொல்ல வேண்டும் என்று கூறிவரும் த்ரிஷா, உண்மையிலேயே கெளதமி மேடம் நல்ல ரசனை உள்ளவர். காரணம், ஹாலிவுட் நடிகை அணிந்தது போன்ற காஸ்ட்யூம் என்றாலும் தனது கை வண்ணத்தில் நிறைய புதுமைகளையும் செய்தார். அதனால்தான் நான் தூங்காவனம் படத்தில் ரொம்ப அழகாக தெரிகிறேன் என்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)