கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் | 'பேடி' படத்தின் புதிய அப்டேட் | தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு |
உ படத்தில் அறிமுகமானவர் நேஹா. அந்தப் படத்திற்கு ஹீரோயின் கிடைக்காமல் படக்குழு தடுமாறியபோது அதில் பணியாற்றிய உதவி இயக்குனர் ஒருவர் பாண்டிச்சேரியில் இருந்த தன் தோழி நேஹாவை ஹீரோயினாக நடிக்க வைத்தார். நண்பனுக்காக ஒரு படத்தில் நடித்து விட்டு ஒதுங்கிவிட நினைத்த நேகாவுக்கு இப்போது அடுத்த பட வாய்ப்பு கிடைத்துள்ளது. படத்தின் பெயர் டீ கடை ராஜா.
ராஜா சுப்பையா என்பவர் இயக்கி ஹீரோவாக நடிக்கிறார், இவர்கள் தவிர யோகி பாபு, மதன் பாப், பாடகி அனுராதா கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் நடிக்கிறார்கள். பன்டூன் டாக்கிஸ் தயாரிக்கிறது. வெண்ணிலா வீடு படத்தின் இசை அமைப்பாளர் தன்ராஜ் மாணிக்கம் இசை அமைக்கிறார். "வேலையில்லா பட்டதாரி படத்தில் வரும் டீ கடை ராஜா பாடல் எனக்கு பிடிக்கும். அதையே என் படத்தின் தலைப்பாக்கி விட்டேன். காமெடி கலந்த காதல் கதை" என்கிறார் இயக்குனர் ராஜா சுப்பையா.