Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

36 மணிநேரத்தில் 10 லட்சம் பேர் பார்த்த கமல் பட டிலைர்!

18 செப், 2015 - 05:44 IST
எழுத்தின் அளவு:
10-laksh-viewers-watched-Thoongavanam-trailer-in-36-hrs

கமலஹாசனின் தூங்காவனம் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது. த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர், யூகிசேது, சம்பத், மது ஷாலினி, சோமசுந்தரம், சந்தானபாரதி, உமா ரியாஸ்கான் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை ராஜேஷ் எம் செல்வா இயக்கி இருக்கிறார். கமலின் திரைக்கதையில் உருவாகி இருக்கும் தூங்காவனம் படத்தில் கிஷோர், பிரகாஷ்ராஜ் இரவரும் வில்லன்களாக நடித்துள்ளதாக தகவல். 10 வயது மகனுக்கு தந்தையாக வந்த கமல், என் மகனுக்கு ஏதாவது ஒன்று என்றால் உங்களை தொலைத்து விடுவேன் என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. நான் சொன்னா அதை செய்வேன் என்று பேசும் பஞ்ச் டயலாக்கும் இருக்கிறது.


தூங்காவனம் டிரெய்லரில், பப் ஒன்றில் வில்லன்களுடன் கமல் மோதும் காட்சிகள் ஆவேசமாக இருந்தன. நேற்றைய முன்தினம்தான் தூங்காவனம் டிரெய்லர் வெளியானது.


அதற்குள் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தூங்காவனம் டிரெய்லர் வெளியான 36 மணி நேரத்தில் 10 லட்சத்து 23 ஆயிரத்து 494 பேர் யூடியூப்பில் பார்த்து ரசித்துள்ளனர். 8035 பேர் அதற்கு லைக் கொடுத்துள்ளனர். 282 பேருக்கு டிரெய்லர் பிடிக்கவில்லையாம்.


அதேசமயம், தூங்காவனம் படத்தின் தெலுங்கு பதிப்பான சீக்கட்டி ராஜ்யம் படத்தின் டிரெய்லரை 168542 பேர் மட்டுமே பார்த்துள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)