Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குஷ்பு, 'தல - தளபதி' ரசிகையா ?

18 செப், 2015 - 11:22 IST
எழுத்தின் அளவு:
Is-Kushboo-is-fan-of-Ajith-and-Vijayq

திரையுலகில் ஹீரோக்களின் பேட்டிகளைப் பற்றிப் பேசும் போது எப்போதுமே இருவரைப் பற்றிய பேச்சுக்கள்தான் தமிழ் சினிமாவில் அதிகமாக இருந்து வருகின்றன. தங்களது நடிப்பால் ரசிகர்களை அதிகம் கவர்ந்த எம்ஜிஆர், சிவாஜிகணேசன் ஆகியோரது காலத்திலிருந்து இது அதிகமாக ஆரம்பித்தது. அடுத்து ஆரம்பமான ரஜினிகாந்த் - கமல்ஹாசன் என்பது இன்று வரை இருந்து கொண்டிருக்கிறது. இன்றைய இளம் தலைமுறையினரிடையே விஜய் - அஜித், அதாவது 'தல - தளபதி' யார் டாப் ? என்ற விவாதம் அடிக்கடி எழுகிறது. அதை சமூக வலைத்தளங்களால் ரசிகர்களும் ஊதி ஊதி பெரிதாக்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.


டிவிட்டரில் அதிகம் கருத்துக்களைச் சொல்லும் நடிகைகளில் முதலிடத்தில் இருப்பவர் குஷ்புதான். அரசியல், சினிமா, விளையாட்டு, பொதுப் பிரச்சனை என எதைப் பற்றியும் கருத்து சொல்லிக் கொண்டேயிருப்பார். யார் என்ன கேட்டாலும் அதைப் பற்றித் தயங்காமல் தன்னுடைய கருத்தை அவர் பதிவு செய்வார். சமயங்களில் ஏட்டிக்குப் போட்டியான பதிலாகவும் அது இருக்கும். நேற்று ஒரு ரசிகர் குஷ்புவிடம் நீங்கள் 'தல ரசிகையா, தளபதி ரசிகையா' எனக் கேட்டுள்ளார். அதற்கு கொஞ்சமும் தயங்காமல் 'நவரச நாயகன் கார்த்திக்' என பதிலளித்துள்ளார்.


இதற்கு முன்பும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரைப் பற்றிய ரசிகர் ஒருவரின் கேள்வியில், “ரஜினிகாந்துடன் மீண்டும் நடிக்கும் வாய்ப்பு வந்தால் நடிக்க மாட்டேன், ஆனால், கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் உடனே நடிப்பேன்,” என்று பதிலளித்திருந்தார்.


'தல - தளபதி' பற்றிய குஷ்புவின் நேற்றைய பதில், அஜித், விஜய் ரசிகர்களுக்கு விவாதத்திற்குரிய பொருளாகக் கிடைத்துவிட்டது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)