விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் |
சிந்து சமவெளி படத்தின் வாயிலாக தமிழ் திரை உலகிற்கு அறிமுகமான மலையாள நடிகை அமலா பால் தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்த பின்னர் இயக்குநர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டு திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டுள்ளார்.
நடிகர் சூர்யாவுடன் இணைந்து ஹைக்கூ படத்தில் நடித்து வரும் அமலா பால் டோலிவுட்டில் கடைசியாக நடித்த படம் ஜண்ட பை கபிராஜு. தமிழில் இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அமலா பால் நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் படத்தின் தெலுங்கு பதிப்பு தான் ஜண்ட பை கபிராஜு. இப்படத்தில் நடிகை அமலா பால் நடிகர் நானிக்கு ஜோடியாக நடித்தார்.
இந்நிலையில் தற்போது அமலா பாலிடம் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க பேச்சு வார்த்தை நடைபெறுகின்றதாம். நடிகர் மஞ்சு விஷ்ணு நாயகனாக நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அமலா பாலை அணுகியுள்ளார் சாய் கார்த்திக். இப்படத்தில் நயாகியாக நடிக்க நடிக்க சோனரிகா ஒப்பந்தமாகியுள்ளார். நாயகிக்கு இணையான வேடம் என்பதால் அமலா பால் இப்படத்தில் நடிக்க சம்மதிக்கக் கூடும் என சாய் கார்த்திக் கூறியுள்ளார்.