Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒன்லி ஹீரோ, அடம் பிடிக்கும் அஜ்மல்

30 ஆக, 2015 - 10:58 IST
எழுத்தின் அளவு:
Acts-only-lead-role-:-Ajmal

மிஷ்கின் இயக்கிய 'அஞ்சாதே' படத்தில் நல்லவனாக இருந்து வில்லனாக மாறும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் அஜ்மல். அடுத்து 'தநா 07 அல 4777, திரு திரு துறு துறு' ஆகிய படங்களில் நாயகனாக நடித்தார். இருந்தாலும் 'கோ' படத்தில் வில்லனாக நடித்த பிறகுதான் அவரை ரசிகர்களுக்கும் அஜ்மல் என்று அடையாளம் தெரிய ஆரம்பித்தது. அதன் பின் தமிழில் அவர் நடித்த 'கருப்பம்பட்டி, வெற்றிச் செல்வன்' ஆகிய படங்களும் வெற்றி பெறவில்லை. இடையில் தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார்.


ஆனாலும், தமிழில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிப்பதே தனது லட்சியம் என்கிறார் அஜ்மல். “அஞ்சான், கோ' ஆகிய படங்களில் இயக்குனர்களுக்காகத்தான் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்தேன். 'கோ' படத்தைப் பொறுத்தவரையில் எனக்குத்தான் முக்கியத்துவம் அதிகம். நான்தான் படத்தில் ஹீரோவாகத் தெரிவேன். என்னைச் சுற்றிதான் படத்தின் கதையே நகரும். அதனால் அந்தப் படத்தில் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்தேன். இப்போது வெளிவந்துள்ள 'தனி ஒருவன்' படத்தில் கூட அரவிந்த் சாமி நடித்துள்ள கதாபாத்திரத்தில் நடிக்க எனக்குத்தான் முதலில் வாய்ப்ப்பு வந்தது. ஆனால், நான் வில்லனாக நடிக்க சம்மதிக்கவில்லை. தமிழில் இனி நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன். வேறொருவர் படங்களில் வில்லனாக நடித்து என்னை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை. சிறு வயதிலிருந்தே தமிழ் சினிமா மீது அப்படி ஒரு ஆர்வம் எனக்கு. சில நல்ல கதைகளைக் கேட்டு வைத்துள்ளேன். விரைவில் அது பற்றிய அறிவிப்புகள் வெளியாகும்,” என்கிறார் அஜ்மல்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)