Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாந்தனு, கீர்த்தி திருமண வரவேற்பு : ரஜினி நேரில் வாழ்த்து

23 ஆக, 2015 - 12:30 IST
எழுத்தின் அளவு:
Rajini-and-other-stars-in-Shanthanu---Keerthi-Marriage-reception

இயக்குனர் கே.பாக்யராஜ், பூர்ணிமா தம்பதிகளின் மகனும், நடிகருமான சாந்தனுவுக்கும், தொலைக்காட்சி தொகுப்பாளினி கீர்த்திக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. இவர்களின் திருமண வரவேற்பு நேற்று மாலை வானகரம், ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடந்தது.


இந்த வரவேற்பு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி தன் மகள் சவுந்தர்யாவுடன் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார். திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு, துணை தலைவர் தேனப்பன், இயக்குனர் சங்கத் தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன், டாக்டர் ராஜசேகர், ராஜ்கிரண், பரத், ஸ்ரீகாந்த், உதயநிதி ஸ்டாலின், ஜெய், அதர்வா, மோகன், கவுண்டமணி, நாசர், சேரன், சிவகுமார், பிரசன்னா, இயக்குனர்கள் மகேந்திரன், ஷங்கர், லிங்குசாமி, ஜெயம்ராஜா, ஏ.எல்,விஜய். கரு.பழனியப்பன், பார்த்திபன், பாண்டியராஜன், சிம்பு தேவன், அட்லி, பி.வாசு, பாரதிராஜா, வெங்கட்பிரபு, அமீர், வசந்த், நடிகைகள் ஸ்ருதி ஹாசன், அமலாபால், கோவை சரளா, சரண்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், காங்கிரஸ் கட்சி தேசிய செயலாளர் திருநாவுக்கரசு, சசிகலா நடராஜன், தமிழச்சி தங்க பாண்டியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)