Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹாட்ரிக் அடிப்பாரா ஜெயம் ரவி ?

06 ஆக, 2015 - 07:59 IST
எழுத்தின் அளவு:
Jeyam-Ravi-on-a-hat-trick

ஒரு ஹீரோவுக்கு அடுத்தடுத்து படங்கள் வெளிவருவது ஆச்சரியமான ஒரு விஷயம்தான். ஜெயம் ரவி நடித்து கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிவந்த “எங்கேயும் காதல், ஆதி பகவன், நிமிர்ந்து நில்” ஆகிய படங்கள் தோல்விப் படங்களாகவே அமைந்தன. அந்தப் படங்களை அடுத்து அவர் நடித்த 'பூலோகம்' படம் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் நிலையிலும் தயாரிப்பாளரின் பணப் பிரச்சனையால் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக வெளிவராமலே இருக்கிறது. இருந்தாலும் ஜெயம் ரவி தன்னுடைய அடுத்த படங்களை நம்பி காத்திருந்தார். அவர் நம்பிக்கை வீண் போகவில்லை.


ஜுன் மாதம் வெளிவந்த 'ரோமியோ ஜுலியட்' படம் அவருக்கு வெற்றிக் கணக்கை ஆரம்பித்து வைத்தது. கடந்த ஜுலை மாதம் 31ம் தேதி வெளிவந்த 'சகலகலா வல்லவன்' படத்திற்கு இரு வேறு விதமான விமர்சனங்கள் எழுந்தாலும் வியாபார ரீதியாக படம் நல்ல வசூலைக் கொடுத்து வருவதாகச் சொல்கிறார்கள். இப்போது இந்த மாதத்திலும் இன்னொரு ரிலீசுக்குத் தயாராகிவிட்டார். அண்ணன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள 'தனி ஒருவன்' படம் இந்த மாதம் 28ம் தேதி வெளியாக உள்ளது.


ஒரு 'பூலோகம்' படம் வெளிவராத நிலையில் அடுத்தடுத்து வந்த இரண்டு படங்களும் வெற்றி பெற்றுள்ளதால் ஜெயம் ரவி மகிழ்ச்சியில் இருக்கிறாராம். அண்ணன் ராஜா இயக்கும் படங்கள் அவருக்கு எப்போதுமே வெற்றியைப் பெற்றுத் தருவதோடு, நல்ல இமேஜையும் உருவாக்கித் தரும். அந்த எதிர்பார்ப்பில் 'தனி ஒருவன்' படம் மூலம் ஹாட்ரிக் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கை ஜெயம் ரவிக்கு அதிகமாகவே இருக்கிறதாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)