Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

க்யூட்டாக மாறுகிறார் அனுஷ்கா!

28 ஜூலை, 2015 - 12:47 IST
எழுத்தின் அளவு:
Anushka-to-be-beutiful

அருந்ததி படத்தில் அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபல நடிகையானவர் அனுஷ்கா. அதையடுத்து வில்லேஜ், சிட்டி என்று மாறுபட்ட கதைகளில் நடித்து வந்தபோதும், பாகுபலி, ராணி ருத்ரமாதேவி படங்கள் மூலம் அவர் வரலாற்றுப்பட நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த படங்களுக்காக வருடக்கணக்கில் தனது நேரத்தை செலவிட்டு வந்த அவர், இனிமேல் இப்போதைக்கு வரலாற்று படங்கள் இல்லை என்று சொல்லிக்கொண்டு மீண்டும பக்கா கமர்சியல் கதைகளில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அதோடு, சரித்திர படங்களுக்காக தனது உடல் எடையை அதிகப்படுத்தி கேரக்டர்களாக மாறிய அனுஷ்கா, தற்போது ஆர்யாவுடன் நடித்து வரும் இஞ்சி இடுப்பழகி படத்திலும் முதல் பாதியில் 35 வயது ஆன்ட்டி போன்ற தோற்றத்தில்தான் நடித்து வந்தார்.


ஆனால், இப்போது கதைப்படி அவரும் ஸ்லிம்மாக வேண்டும் என்பதற்காக உடல் எடையை குறைத்தபடியே அந்த படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். அதேசமயம், சரித்திர படங்களால் தன்னை அழகுமிளிர அவுட்புட் கொடுக்க முடியவில்லை என்பதால், இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் உருவாவதால், படத்தின் பிற்பாதியில் இதுவரை இல்லாத அளவுக்கு தன்னை அழகாக காண்பிக்க வேண்டும் என்று அனுஷ்காவே ஆசைப்படுகிறாராம். அதனால் டயட்ஸ், யோகா பயிற்சிகள் மூலம் எடையை குறைத்துக்கொண்டிருக்கும் அனுஷ்கா, தன்னை க்யூட்டாக காட்டியே தீருவது என்று தீவிரம் காட்டி வருகிறாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)