மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
ரால்ப் புரொடக்ஷன்ஸ் ரபேல் சல்தானா தயாரிப்பில், நாகராஜன் இயக்கும் படம் “அழகென்ற சொல்லுக்கு அமுதா”. ஒரு இளைஞனுடைய காதலில் நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படமே “அழகென்ற சொல்லுக்கு அமுதா”.
ரிஜன் நாயகனாகவும், அர்ஷிதா நாயகியாகவும் நடிக்க, உடன் பட்டிமன்றம் ராஜா, ரேகா சுரேஷ், சுவாமிநாதன், சதுரங்கவேட்டை வளவன், மகாந்தி சங்கர், கலை, நிப்பு இயக்குனர் சரவணசக்தி, மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், எழுதி நாகராஜன் இயக்குகிறார், இவர் இயக்குனர் சுசீந்திரனிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
ரஜின்மகாதேவ் இசையமைக்க, கல்யாணராம் ஔிப்பதிவு செய்கிறார். சென்னை வியாசர்பாடி, பெரம்பூர், தண்டையார்பேட்டை, மற்றும் எண்ணூர் போன்ற பகுதிகளில் படபிடிப்பு நடந்து வருகிறது.