Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிலிமில் உருவாகும் கடைசி திரைப்படம் தனி ஒருவன்

05 ஜூலை, 2015 - 12:43 IST
எழுத்தின் அளவு:
Thani-oruvan-last-movie-shoots-in-film-roll

தமிழ் சினிமா டிஜிட்டலுக்கு முழுமையாக மாறிவிட்டது. சூப்பர் ஸ்டார் படத்திலிருந்து பவர் ஸ்டார் படம் வரைக்கும் அனைத்தும் டிஜிட்டலில்தான் உருவாக்கப்படுகிறது. என்றாலும் பிலிமில் உருவாக்கப்படும் படங்களில் இருக்கும் நேர்த்தி டிஜிட்டலில் இல்லை என்று சொல்வார்கள். கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படம் முழுக்க முழுக்க பிலிமில் உருவாக்கப்பட்டது.


தற்போது ஜெயம்ரவி, நயன்தாரா நடிப்பில் ஜெயம் ராஜா இயக்கும் தனி ஒருவன் படம் பிலிமில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கிறார். தம்பி ராமைய்யா, கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.


"இந்தப் படத்தின் கதையை கேட்டவுடன் இதில் காட்சிக்கான முக்கியத்தும் அதிகம் இருப்பதை உணர்ந்து இதை பிலிமில் எடுத்தால் நன்றாக இருக்கும் என்றேன். கொஞ்சம் பட்ஜெட் அதிகமாகும், சிரமமும் அதிகம் என்றேன். பட்ஜெட்டை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். சிரமத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று தயாரிப்பாளர்கள் ஒத்துக் கொண்டார்கள்" என்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி.


தற்போது சென்னையில் உள்ள பிலிம் லேப்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டது. பிலிம் பிராசிங் செய்ய மும்பைதான் செல்ல வேண்டும். ஒரு பிரிண்டுக்கு ஒரு லட்சம் வரை செலவாகும் என்கிறார்கள். 300 பிரிண்ட் போட்டால் அதற்கே 3 கோடி செலவாகும். என்றாலும் செலவை பற்றி கவலைப்படாமல் தனி ஒருவனை உருவாக்கி வருகிறார்கள். பிலிமில் தயாராகும் கடைசி படம் தனி ஒருவனாக இருக்கலாம் என்று தெரிகிறது. பிலிமில் படத்தை தயாரித்தாலும் பெரும்பாலான தியேட்டர்கள் கியூப்பிற்கு மாறிவிட்டதால் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில்தான் திரையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)