Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முத்தக் காட்சியில் 30 'டேக்' வாங்கிய ஜி.வி. பிரகாஷ்குமார்

03 ஜூலை, 2015 - 03:42 IST
எழுத்தின் அளவு:
G.V.Prakash-put-30-takes-for-lip-lock-scene-with-Manisha-Yadav

நடிகராகிவிட்டால் எதற்கும் தயாராக இருக்க வேண்டும், இது செய்ய மாட்டேன், அது செய்ய மாட்டேன் என்று சொல்ல முடியாது. பொதுவாக இப்படி ஹீரோயின்கள்தான் சொல்வார்கள். ஆனால், விட்டால் ஒரு ஹீரோவையே அப்படி சொல்ல வைத்து விடுவார்கள் போலிருக்கிறது. நடிக்கும் போது மனைவியிடம் முத்தக் காட்சி, நெருக்கமான காட்சி ஆகியவற்றில் நடிக்க மாட்டேன் என ஜி.வி.பிரகாஷ்குமார் சொன்னதாகச் செய்திகள் வெளிவந்தன. ஆனால், அது நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு கதையாகிவிட்டது.


ஜி.வி.பிரகாஷ்குமார் தற்போது நாயகனாக நடித்து வரும் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தில் சமீபத்தில் முத்தக் காட்சி ஒன்றில் நடித்தாராம். முத்தக் காட்சி என்றால் கன்னத்தில் முத்தமிடும் காட்சியல்ல, உதட்டோடு உதடு வைத்து முத்தமிடும் காட்சி. அந்தக் காட்சியில் நடித்த நாயகியான மனிஷா யாதவ் எந்த டென்ஷன் ஆகாமல் நடித்துக் கொண்டிருக்க, ஜி.வி.க்குத்தான் டென்ஷன் ஆகி வியர்த்துக் கொட்டிவிட்டதாம். இயக்குனருக்கு காட்சியில் திருப்தி வராமல் போக அந்தக் காட்சியில் நடித்து முடிக்க 30 டேக் வாங்கிவிட்டாராம் ஜி.வி. முத்தக் காட்சியில் நடிக்க பலர் போட்டி போட்டுக் கொண்டிருக்க, ஜி.வி. இப்படி டேக் வாங்குகிறாரே என்று படக்குழுவினர் கிண்டலடிக்கும் வரை போய்விட்டதாம். விசாரிச்சிப் பார்த்தீங்களா, ஜி.வி. உண்மையிலேயே டேக் வாங்கினாரான்னு, ஒரு வேளை வேணும்னு பண்ணியிருப்பாரோ...?

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)