வேல்ஸ் வசமான ஈவிபி : புதிய பிலிம் சிட்டியை திறந்து வைக்கும் நிர்மலா சீதாராமன் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த ராஜேஷ் | எம்.எஸ்.பாஸ்கர் படத்தின் மூலம் இயக்குனர் ஆன ப்ராங்க் ஸ்டார் ராகுல் | ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் படங்கள், தொடர்கள் அறிவிப்பு | கடன் பிரச்னை இருந்தாலும் நிம்மதியாக தூங்குகிறேன்: சேரன் பேச்சு | 100 முறை ஆர்ஆர்ஆர் பார்த்தேன் : ராம்சரணின் வீட்டிற்கே வந்து நெகிழ்ந்த ஜப்பான் ரசிகை | நடிகை ஹேமா மீதான போதைப்பொருள் வழக்கு ரத்து | படம் ரிலீஸ் : சிறையில் இருந்தபடி ரசிகர்களுக்கு நடிகர் தர்ஷன் கோரிக்கை | உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டளிக்க முடியாத மம்முட்டி | மலையாள திரைப்பட விழா நடுவர் மீது பாலியல் புகார் |
இந்தியில் சூப்பர் ஹிட்டான "த்ரீ இடியட்ஸ்" படம் தமிழில் எடுக்கப்படுகிறது. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் டைரக்ட் செய்கிறார். படத்திற்கு தலைப்பு வைக்க நிறைய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியில் "நண்பன்" என்று பெயர் வைத்துள்ளார் ஷங்கர்.
விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகிய மூவர் கூட்டணியில், ஷங்கர் இயக்கும் இப்படத்தை ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் தயாரிக்கிறது. விஜய் ஜோடியாக ஆந்திராவின் முன்னணி நடிகை இலியானா நடிக்கிறார். இவர்கள் தவிர நடிகரும், டைக்டருமான எஸ்.ஜே.சூர்யா, சத்யன், அஜய் ரத்னம், அனுயா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் விஜய் கலந்து கொள்ளவில்லை. பிப்.25ம் தேதி முதல் நடிகர் விஜய் சூட்டிங்கில் கலந்து கொள்கிறார்.