நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
மலையாள படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டதால், கேரளாவில் மேடை நாடகங்களில் நடித்து வரும் திலகன். தமிழில் மீண்டும் வில்லனாக நடிக்க வருகிறார்.
மலையாளத்தில் பிரபல நடிகர் திலகன். வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வந்த இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்ற திலகன், மலையாள திரைப்படத்துறை சங்கத்திற்கு எதிராக செயல்பட்டதால் அவர் மலையாள திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டார். இதனையடுத்து மேடை நாடகங்களில் மட்டும் நடித்து வந்தார். இந்நிலையில் தமிழில் மீண்டும் வில்லனாக நடிக்கவுள்ளார்.
"உயிரின் எடை 21 அயிரி" என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்தபடத்தை கதை, திரைக்கதை, இசை, இயக்கம் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்று ஹீரோவாகவும் நடிக்கிறார் இ.எல்.இந்திரஜித்.
படம்குறித்து இந்திரஜித் கூறியதாவது: "1908ல் டாக்டர் டங்கன் மெக்கடஹல் என்பவர் உயிரின் எடை எவ்வளவு என்பது குறித்து ஆராய்ச்சி செய்தார். இறப்பிற்கு பின்னர் மனித எடையில் இருந்து 21கிராம் குறைவதாக நிரூபித்தார். அதுவே உயிரின் எடை, இதை படத்தின் கதையுடன் சேர்த்து இருக்கிறேன். படத்தில் தாதவாக திலகன் நடிக்கிறார். அவருடைய அடியாளாக நான் நடிக்கிறேன். புதுமுகம் வினிதா ஹீரோயினாக அறிமுகமாகிறார். படத்தின் கதை என்னைச்சுற்றியே நகரும். வழக்கமான படங்களை போல் இல்லாமல் இந்தபடம் சற்று வித்தியாசமாக இருக்கும்" என்றார்.