விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் |
நே என்ற தமிழ் படத்தில் அறிமுகமானவர் கிரிஷி தபண்டா. மிஸ் கன்னடமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அறிமுகமாகும் முதல் தமிழ் படம் வெளிவரும் முன்பே மூன்று கன்னடப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஏற்கனவே கஹி, அகிரா படங்களில் நடித்து வரும் கிரிஷி. தற்போது அமரசித்ரா என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
கர்நாடக மாநிலம் கூர்க்கை சேர்ந்த கிரிஷிக்கு தமிழில் பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற ஆசை. நே படத்தினை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். புஷ்கின் ராஜா என்ற புதுமுகம் இயக்கும் இந்த படத்திற்கு எழுத்தாளர் சாரு நிவேதிதா வசனம் எழுதியுள்ளார், வீரக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சிறுவர்களின் வாழ்க்கையை கதைகளமாக கொண்ட இந்தப் படத்தில் கிரிஷி ஹீரோயின்.