பாதுகாப்பு வீரர்களின் தியாகம்: சமந்தா நெகிழ்ச்சி | 23வது ஆண்டில் தனுஷ்! - குபேரா படத்தின் கதாபாத்திரத்தின் பெயர் வெளியானது! | ‛ஜனநாயகன்' படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும் விஜய்! லீக் அவுட் ஆன புகைப்படம்!! | பாடகி கெனிஷாவுடன் என்ட்ரி கொடுத்த ரவி மோகன்- ஆர்த்திக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராதிகா - குஷ்பூ! | கமலின் 237வது படத்தை இயக்கும் அன்பறிவ் பிறந்த நாள் - வீடியோ வெளியிட்ட ராஜ்கமல் பிலிம்ஸ்! | ரஜினி அடுத்த பட ரேசில் வினோத், அருண்குமார்! | சிவாஜி குடும்பத்தில் இருந்து மற்றொரு நடிகர்! | சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக மோகன்லால்? | பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி |
இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். மூன்றாவது முறையாக முஸ்லிமாக மதம் மாறி கீழக்கரையைச் சேர்ந்த ஜெபருன்னிசா என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் யுவனின் தங்கை பவதாரிணி தவிர வேறு யாரும் கலந்து கொள்ளவில்லை. தன் திருமணம் மற்றும் மதமாற்றம் குறித்தும் இதுவரை யுவன் பேசியதில்லை. நேற்று (மார்ச் 29) ஒரு இசை நிகழ்ச்சி தொடர்பாக அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது முதன் முறையாக தன் மதமாற்றம், திருமணம் பற்றி பேசினார்.
அவர் கூறியதாவது: மதம் மாறியது எனது தனிப்பட்ட விஷயம். பிடித்திருந்தது மாறினேன். அதுபற்றி மேலும் பேசுவதற்கு எதுவுமில்லை. என் மதமாற்றம், திருமணம்... எதற்கும் அப்பா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. உனக்கு எது மகிழ்ச்சியாக இருக்கிறதோ அதைச் செய் என்று சொல்லிவிட்டார். திருமணம் ரகசியமாக நடந்தது போன்று மீடியாக்களில் செய்திகள் வந்தது. ஒரு இஸ்லாமிய திருமணம் எப்படி நடக்குமோ அப்படி நடந்தது. என் குடும்பத்தினர் கலந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் பெண் வீட்டார் 2 நாட்களுக்குள் திருமணத்தை நடத்த விரும்பியதால் அந்த குறுகிய கால இடைவெளிக்குள் அவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை. திருமணம் முடிந்த மறுநாளே மனைவியுடன் சென்று அப்பாவிடம் ஆசி பெற்றேன்.
எனது பெயரை இஸ்லாமிய பெயராக மாற்றி இருந்தாலும், சினிமாவில் யுவன்சங்கர் ராஜா என்றே இருக்கும். அந்த பெயரில் அறிமுகமாகித்தான் புகழ்பெற்றேன். திடீரென்று பெயரை மாற்றினால் ரசிகர்களுக்கு குழப்பம் வரும். அதனால் யுவன் என்கிற பெயரே தொடரும்.
இவ்வாறு யுவன் கூறினார்.