Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவாஜி பேரனின் பாஸ்போர்ட்டை முடக்க கோரி தீர்ப்பாயத்தில் வழக்கு

07 மார், 2015 - 08:18 IST
எழுத்தின் அளவு:
Case-against-vikram-prabhu

வங்கியில் வாங்கிய கடன் தொகையை திரும்ப செலுத்தாத வழக்கில், நடிகர் சிவாஜியின் பேரனும், நடிகருமான விக்ரம் பிரபுவின் பாஸ்போர்ட்டை முடக்கக் கோரி, கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.


சென்னை, கீழ்ப்பாக்கம், ரெக்ஸ் ரோட்டரி நிறுவனத்தில், பிரசாத், நடிகர் சிவாஜியின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனும், நடிகருமான விக்ரம் பிரபு, பிரபுவின் அண்ணன் ராம்குமாரின் மனைவி கண்ணம்மா ஆகியோர், நிர்வாக இயக்குனராக உள்ளனர். இந்நிறுவனத்திற்கு, பர்க்ளேஸ் வங்கியில், 2012ல், 35 லட்சம் ரூபாய் கடன் பெறப்பட்டு, 10.31 லட்சம் ரூபாய் திரும்ப செலுத்தப்படவில்லை. நிலுவைத் தொகையை காலதாமதமின்றி செலுத்த வேண்டும் என, வங்கி மூலம் கடிதம் எழுதப்பட்டும் பதில் இல்லை. வங்கியின் கடன் பாக்கிகளை வசூலிக்க, அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட, போனிக்ஸ் ஏ.ஆர்.சி., நிறுவனம் சார்பில், விக்ரம் பிரபுவின் நிறுவனத்திற்கு, நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை. இந்நிலையால், கடன் பாக்கி தொகையை வசூலித்து தரும் படியும், அதுவரை, விக்ரம் பிரபு உட்பட, வழக்கில் சம்பந்தப்பட்ட, மூவரின் பாஸ்போர்ட்டையும் முடக்க வேண்டும் எனவும், சென்னையில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயத்தில், போனிக்ஸ் ஏ.ஆர்.சி., நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில், மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் முத்துகுமார் ஆஜரானார். வழக்கு விசாரணையை நீதிபதி ரவீந்திர போஸ், வரும் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)