Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தவறான நேரத்தில் வெளியாகும் எனக்குள் ஒருவன்

04 மார், 2015 - 01:43 IST
எழுத்தின் அளவு:
Enakkul-Oruvan-releasing-in-wrong-time

தற்போது பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ தேர்வுகள் நேரம். மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றி எண்ணாமல் இந்த வாரம் 13 படங்களை ரிலீஸ் செய்கின்றனர். மார்ச் 6ஆம் தேதி அன்று, சித்தார்த் நடித்த எனக்குள் ஒருவன், சேரன் இயக்கியுள்ள ஜே.கே.என்னும் நண்பனின் வாழ்க்கை, ஆர்கே நடித்த என் வழி தனி வழி, மகா மகா, கனல், ரொம்ப நல்லவண்டா நீ, இரவும் பகலும், தொப்பி, சேர்ந்து போலாமா, இஞ்சி மொரப்பா, ஆயா வடை சுட்ட கதை என 11 நேரடித்தமிழ்ப்படங்கள் வெளிவர உள்ளன. மேற்கண்ட படங்களுடன் 2 டப்பிங் படங்களும் சேர்ந்து, 13 படங்கள் இந்த வாரம் வெளியாகின்றன. இன்னொரு பக்கம் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியும் நடைபெற்று வருகிறது.


இந்த நேரத்தில் படங்களை ரிலீஸ் செய்வது என்பது தற்கொலைக்கு சமம் என்று தெரிந்தும், சித்தார்த் நடித்த எனக்குள் ஒருவன் படத்தை எப்படி ரிலீஸ் செய்கிறார்கள் என்று தெரியவில்லை என்று சொல்வதோடு, தவறான நேரத்தில் அப்படம் ரிலீஸ் ஆவதால் நிச்சயமாக வெற்றியடைய வாய்ப்பில்லை என்கிறார்கள் அனுபவம் வாய்ந்த விநியோகஸ்தர்கள். சித்தார்த் கடைசியாக நடித்த காவியத்தலைவன் உட்பட பல படங்கள் தோல்வியடைந்ததினால் எனக்குள் ஒருவன் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் யாரும் முன்வரவில்லை. தியேட்டர்காரர்களும் எனக்குள் ஒருவன் படத்தை திரையிட ஆர்வம் காட்டவில்லையாம். அதன் காரணமாக ஃபர்ஸ்ட்காப்பி ரெடியாகி பல மாதங்கள் பரணில் கிடந்தத எனக்குள் ஒருவன். இனியும் போட்டு வைத்தால் வேலைக்கு ஆகாது என்பதால் தூசுதட்டி இந்த வாரம் தியேட்டருக்குக் கொண்டு வருகிறார்கள். ஆனால் தவறான நேரத்தில் வெளியாவதால் எனக்குள் ஒருவன் படத்துக்கு கடும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தான் நடித்த படங்கள் வரிசையாக தோல்வியடைந்த நிலையில் எனக்குள் ஒருவன் படத்தைத்தான் சித்தார்த் மலைபோல் நம்பிக்கொண்டிருக்கிறார்...!


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)