Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வடிவேலுவின் எலி, சீனா தானா 007 படத்தின் தழுவலா?

27 பிப், 2015 - 11:23 IST
எழுத்தின் அளவு:
Is-Vadivelus-Eli-movie-related-to-Seena-Thaana-007

தெனாலிராமன் படத்திற்கு பிறகு வடிவேலு நடிக்கும் புதிய படம் எலி. தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்குகிறார். அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர், ஜெய்சங்கர், ரவிசந்திரன் போன்ற ஆக்ஷன் ஹீரோக்கள் கொள்ளைகூட்ட பாஸை கண்டுபிடிக்க அவர்களின் இடத்துக்கே மாறுவேஷத்தில் செல்வார்கள். அங்கு வேலை செய்து கொண்டே துப்பறிவார்கள். அது சீரியசாக இருக்கும். அதுவே சிரிப்பாக இருந்தால் அதுதான் எலியின் கதை என்கிறார்கள்.


ஒரு கும்பலை பிடிக்க எலி மாதிரி உள்ளே புகுந்து செல்லும் வடிவேலு ஒரு ரகசிய உளவாளி. அங்கு அவர் புத்திசாலித்தனமாக செயல்படுவதாக நினைத்துக் கொண்டு செய்யும் காரியங்கள். மொக்கையாகி அவரையே திருப்பி அடிக்கும். அது மக்களை சிரிக்க வைக்கும்.


இப்படி ஒரு கதைதான் 2007ம் ஆண்டு வெளிவந்த சீனாதானா 007 என்ற படத்தின் கதையும். இது மலையாளத்தில் வெளிவந்த சி.ஐ.டி மூசா என்கிற படத்தின் ரீமேக். டி.பி.கஜேந்திரன் இயக்கி இருந்தார். வடிவேலுவும், பிரசன்னாவும் தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்துவார்கள், வடிவேலு பெயர் சீனிச்சாமி, பிரசன்னா பெயர் தமிழரசு இரண்டையும் சேர்த்துதான் சீனாதான என்று பெயர். அதிலும் வடிவேலு துப்புதுலக்குகிறேன் என்ற பெயரில் மொக்கையாக எதையாவது செய்து சிரிக்க வைப்பார்.


அதேபோன்ற கதைதான் இது என்றும், எலி படத்தில் வடிவேலு நடிக்கும் கேரக்டர் ஒன்றும் புதிதானது இல்லை என்றும் சொல்கிறார்கள். சீனாதானாவில் வடிவேலுக்கு ஜோடிஇல்லை. இதில் ஜோடி உண்டு. டூயட், ரொமான்ஸ் எல்லாமே உண்டு.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)