'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
லிங்கா படம் வெளியான மூன்றாவது நாளில் இருந்தே கலெக்சன் இல்லை என்று அந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் கொடி பிடிக்கத் தொடங்கி விட்டனர். விளைவு, ஒரு வாரத்துக்கு தியேட்டரில் ஹவுஸ்புல்லாக இருக்கும். அதனால், ஒரு வாரம் கழித்து படத்தை பார்க்கலாம் என்று நினைத்திருந்த ரசிகர்கள்கூட அதன்பிறகு தியேட்டருக்கு செல்லவில்லை.
ஆக, லிங்கா படம் ஓடவில்லை தோல்வியடைந்து விட்டது என்று அதன்பிறகு தங்களுக்கு ஏற்பட்ட நஷ்ட ஈட்டைக்கேட்டு அப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். பின்னர், ரஜினிக்கு நெருக்கமானவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இப்போது மெகா பிச்சை போராட்டத்தை நடத்தவும் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.
அதனால் பிரச்சினை பெரிய அளவில் சூடு பிடித்து நிற்கிறது. கூடவே, ரஜினிக்கு ஆதரவாக களமிறங்க அவரது ரசிகர்களும் தயார் நிலையில் இருக்கிறர்கள். ஆனால், இந்த நேரத்தில், சரத்குமார், விஜய் இருவரும்தான் ரஜினியை நஷ்டஈடு தர விடாமல் தடுப்பதாக இன்னொரு செய்தியும் ஓடிக்கொண்டிருக்கிறது.