Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஷால் படத்தில் பரத்!

13 ஜன, 2015 - 10:35 IST
எழுத்தின் அளவு:

சுசீந்திரன் இயக்கத்தில் பாண்டியநாடு படத்தில் நடித்த விஷால், அடுத்து வேந்தர் மூவீஸ் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் கடந்த சில மாதங்களாகவே ஈடுபட்டிருந்த சுசீந்திரன்,. தற்போது லொகேஷன்களை பார்த்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையே படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளை ஒப்பந்தம் செய்யும் பணிகளும் நடக்கிறது.


அந்த வகையில், விஷால் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ஆர்யாவும் ஒரு வேடத்தில் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இருபபினும், அந்த படத்தில் நடிப்பது பற்றி ஆர்யா தரப்பு இன்னும் எந்த முடிவும் சொல்லவில்லையாம். ஆனால், அந்த கதையை ரெடி பண்ணியபோதே, விஷாலுடன் ஆர்யா அல்லது பரத்தை நடிக்க வைக்க வேண்டும் என்றுதான் முடிவு செய்திருந்தாராம் சுசீந்திரன்.


மேலும், தற்போதைய நிலவரப்படி ஆர்யாவின் கைவசம் பல படங்கள் இருப்பதால், ஒருவேளை அவர் தாங்கள் கேட்ட தேதியில் கால்சீட் இல்லை என்று கைவிரித்து விட்டால், அடுத்தபடியாக பரத்தை தான் அந்த வேடத்தில் நடிக்க வைக்கப்போகிறாராம் சுசீந்திரன். இதுபற்றி இன்னும் உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை என்றபோதும், ஆம்பள படத்தின் ரிலீசுக்குப்பிறகு விஷாலுடன் நடிக்கப்போவது ஆர்யாவா? இல்லை பரத்தா? என்பது உறுதி செய்யப்படுமாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)