நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
மர்ம அடிகள் பல நிறைந்த வர்மக்கலை தெரியும். கோடம்பாக்கத்தில் வர்மம் எனும் பெயரிலேயே ஒரு திரைப்படம் உருவாகி வருவது தெரியுமா?! கிரசன்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஹனிபா மாஸ்டர், எஸ்.அருணாசலகுமார் இணைந்து தயாரிக்கும் வர்மம் படத்தின் கதைப்படி, பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் நபர்களை கண்டுபிடித்து ஒரு பெண்ணே அதுமாதிரி நபர்களை தீர்த்துக் கட்டுகிறார். அவள்தான் இப்பட கதையின் நாயகி. இந்த கொலைகளை அவள்தான் செய்கிறாள் என்பது தெரியாமல், கதாநாயகன், நாயகியை தீவிரமாக காதலிக்கிறான். ஒரு கட்டத்தில் தன் காதலிதான் கொடூர கொலைகாரி என தெரிந்ததும் நாயகரின் முடிவு என்ன? நாயகியின் முடிவு என்ன? என்பது உள்ளிட்ட பல சஸ்பென்ஸ்களுடன் உருவாகி இருக்கும் வர்மம் படத்தின் அகிலன் நாயகனாகவும், அனகா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நிழல்கள் ரவி, பாலாசிங், மீரா கிருஷ்ணன், புரோட்டா சூரி, புவனா உள்பட பிரபல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
ஏ.எஸ்.லாரன்ஸ் மாதவன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் வர்மம் படத்திற்கு பால்கிரகோரி ஒளிப்பதிவு செய்ய, மீரா லால் இசையமைத்திருக்கிறார். சமீபமாக ஆடியோ வெளியீடு கண்டிருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.