சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
பழம்பெரும் நடிகர் ஏ.கே.வீராசாமி (84) சென்னையில் நேற்று (22ம்தேதி) காலமானார். பணம் படைத்தவன், திருமலை தென்குமரி, முதல் மரியாதை, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், உள்பட 500க்கும் அதிகமான படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தவர் ஏ.கே.வீராசாமி. இவர் இருதய நோயினால் அவதிப்பட்டு வந்தார். அவருடைய மூளையில் ரத்தம் உறைந்து போனதால் கடந்த சில மாதங்களாக கை- கால்கள் செயல்படாமல் படுத்த படுக்கையாக இருந்தார். இந்நிலையில் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் வீராசாமி மரணமடைந்தார். வீராசாமியின் மனைவி ராஜலட்சுமி கடந்த ஓராண்டுக்கு முன்பு காலமானார். வீராசாமிக்கு 4 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.