விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் |
வீரம் படத்திற்கு பிறகு கெளதம் மேனன் இயக்கும் என்னை அறிந்தால் படத்தில் நடித்துள்ள அஜீத், சில கெட்டப்புகளிலும் நடித்திருக்கிறார். அதற்காக தனது பாடிலாங்குவேஜையும் மாற்றியுள்ளார். முக்கியமாக சில படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் நடித்தவர், இந்த படத்திலும் அதை தொடர்ந்தபோதும், ஒரு யூத்புல்லான வேடத்திலும் நடித்திருக்கிறார். இந்த சேஞ்சுக்காக சில மாதங்களை எடுத்துக்கொண்ட அஜீத், அந்த கதாபாத்திரம் ரொம்ப கேசுவலாக, கூலாக இருக்க வேண்டும் என்பதற்காக, அந்த சமயத்தில் படப்பிடிப்புக்கு சில இடையூறுகள் ஏறபட்டபோதும், அஜீத் ரொம்ப கூலாகவே இருந்தாராம். அதைப்பார்த்து, என்ன இவர் இத்தனை பிரச்சினை நடக்கிறது எதையும் பொருட்படுத்தாமல் இருக்கிறாரே என்று நினைத்துக்கொண்டாராம்.
அதை அப்போது அஜீத்திடம் காட்டிக்கொள்ளாத அவர், பின்னர் ஒருநாள் கேட்டபோது, அப்போது நான் நடித்து வந்த கெட்டப் ரொம்ப யூத்தானது மட்டுமல்லாது நான் ரொம்ப கூலாக நடிக்க வேண்டிய கதாபாத்திரம். அப்படியிருக்கும்போது இங்கு நடக்கிற பிரச்சினைகளை என் மனதில போட்டுக்கொணடால், அதன் பிரதிபலிப்புதான் முகத்தில் வெளிப்படும். அதனால்தான் எல்லா பிரச்சினைகளையும் நீங்கள் பார்த்துக்கொள்வீர்கள் என்று எனக்கு எதுவும் சம்பந்தமே இல்லாததுபோல் இருநதேன் என்று அவரிடம் சொன்னாராம் அஜீத்.