Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமலா - நாகார்ஜுனா மகன் படம் ஆரம்பம்!

18 டிச, 2014 - 10:07 IST
எழுத்தின் அளவு:

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகராக இன்றும் இளமையுடன் இருக்கும் நாகார்ஜுனா, 90களில் தமிழ், தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கிய அமலா ஆகியோரின் மகன் அகில் நடிகராக அறிமுகமாகும் தெலுங்குத் திரைப்படம் நேற்று பூஜையுடன் ஆரம்பமானது. வி.வி. விநாயக் இயக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தெலுங்குத் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரும் நடிகர் நிதினின் தந்தையான சுதாகர் ரெட்டி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். முன்னணி வசனகர்த்தாவான கோனா வெங்கட் படத்திற்கு வசனம் எழுதுகிறார்.


தனது அறிமுகப் படம் குறித்து அகில் கூறியதாவது, “இனிமேலும் தாமதிக்காமல் எனது அறிமுகப்படத்தைப் பற்றிய அறிவிப்பை இப்போது வெளியிடுகிறேன். வி.வி.விநாயக்தான் படத்தின் இயக்குனர். தற்போதுதான் சம்பிராதயமான பூஜையை நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினருடன் முடித்தோம். இவ்வளவு நாள் தாமதத்திற்கு மன்னிக்கவும். என்னுடைய தயாரிப்பாளர்களான நிதின், சுதாகர் ரெட்டி ஆகியோருடன் இணைந்ததற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.


அகில் குழந்தையாக இருந்த போது 'சுட்டிக் குழந்தை' என்ற தமிழில் பெயரிடப்பட்டு வெளிவந்த 'சிசிந்திரி' என்ற தெலுங்குப் படத்திலும் சில மாதங்களுக்கு முன் 'மனம்' என்ற படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்திருந்தார். அகில் எப்போது நாயகனாக அறிமுகமாவார் என்பதை தெலுங்குத் திரையுலகமும், ரசிகர்களும் காத்திருந்தார்கள். அவர்களின் ஆசை தற்போது நிறைவேறியுள்ளது. விரைவில் படத்தின் தொடர்ச்சியான படப்பிடிப்பு நடைபெற உள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)