ரூ.100 கோடி வசூலை கடந்த எம்புரான் | இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஹிருத்திக் ரோஷன் | காதல் எப்போதுமே வெற்றி பெறும் : திரிஷா வெளியிட்ட பதிவு | ஜி.வி.பிரகாஷின் பிளாக்மெயில் படத்திற்கு இசையமைக்கும் சாம் சி.எஸ் | மனைவி சங்கீதாவுக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்திய ரெடின் கிங்ஸ்லி | சிக்கந்தர் பட பிரமோஷன் : கிளாமர் காஸ்ட்யூமில் காஜல் அகர்வால் | ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஓடிடி-யில் மாஸ் காட்டும் சூப்பர் ஹிட் படம் | சமுத்திரகனி கதை நாயகனாக நடிக்கும் 'பைலா' | பெப்சிக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு | உ.பி.முதல்வர் யோகியின் வாழ்க்கை சினிமா ஆகிறது |
விஜயகாந்த் நடித்த பூந்தோட்ட காவல்காரன் படத்தில் இயக்குனரானவர் செந்தில்நாதன். அதையடுத்து, அர்ஜூன், சரத்குமார், ராம்கி என முன்னணி ஹீரோக்களை வைத்து சுமார் 25 படங்கள் இயக்கியவர். கடைசியாக உன்னை நான் என்ற படத்தை தயாரித்து இயக்கினார். அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை.
அதனால், சில தொடர்களையும் சில ஆண்டுகளாக இயக்கிய அவர், அதையடுத்து, பார்வை என்ற படத்தை இயக்கியுள்ளார். புதுமுகங்கள் நடித்த அந்த படம் இன்னும் விறபனையாகவில்லை. ஆனால், அதற்குள் தனது அடுத்த படத்தை தொடங்கிவிட்டார் செந்தில்நாதன். அந்த படததிற்கு தடா என்று டைட்டீல் வைத்திருக்கிறார்.
தற்போது சென்னையில் அதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தில் அவரது பார்வை படத்தில் நடித்த அருள்ராஜ் என்பவரே நாயகனாக நடித்து வருகிறார். பார்வை படத்தை காதல் கதையில், இயக்கியிருக்கும் செந்தில்நாதன், இந்த தடா படத்தை ஒரு அதிரடியான அரசியல் கதையில் இயக்குகிறாராம். முந்தைய படத்தில் அருள்ராஜை 15 விதமான கெட்டப்புகளில் நடிக்க வைத்தவர், இந்த தடா படத்திலும் முற்றிலும் மாறுபட்ட வேடம் மட்டுமின்றி, அதிரடியான ஆக்சன் ஹீரோவாகவும் மாற்றியிருக்கிறாராம்.